செய்திகள் :

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சொர்கவாசல் டீசர்!

post image

நடிகர் ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்கவாசல் என்கிற படத்தில் நடித்திருந்தார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.


இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சில நாள்களுக்கு முன், சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியானது. இதில், இடம்பெற்ற சென்னை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு இடையான காட்சிகள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: டார்ஸான் தொடர் ஹாலிவுட் நடிகர் காலமானார்!

குறிப்பாக, படத்தின் எடிட்டர் செல்வா ஆர்கே-ன் டீசர் காட்சி இணைப்புகளும் வடிவமைப்பும் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளன. இதுவரை, யூடியூப்பில் இந்த டீசர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

ஓடிடியில் கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை!

கடைசி உலகப் போர் மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலம... மேலும் பார்க்க

கஜினி - 2: சூர்யா, அமீர் கான் தயார்?

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 வெளியான திரைப்படம் கஜினி. இதில், நாயகனாக சூர்யாவும் நாயகியாக அச... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.24/10/2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்... மேலும் பார்க்க

தண்டகாரண்யம் முதல் பாடல்!

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம... மேலும் பார்க்க

பிரதர் படத்தின் புதிய பாடல் விடியோ..!

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள... மேலும் பார்க்க