செய்திகள் :

பிரியங்கா காந்தியின் முதல் தேர்தல்: ராபர்ட் வதேரா என்ன சொல்கிறார்?

post image

பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி(52) போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கூறுகையில், 'பிரியங்கா இப்போது அவருக்காக சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். எனக்கு 35 ஆண்டுகளாக அவரைத் தெரியும். அவர் தனது குடும்பத்திற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பிரியங்கா அவருக்காக எதுவும் யோசித்தது இல்லை. தற்போது வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

பிரியங்காவின் முதல் தேர்தல்

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். நேற்று(அக். 23) அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார். 1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் ... மேலும் பார்க்க

தீபாவளி முதல் மூன்று இலவச சிலிண்டர்கள்: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி: ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.இதையடுத்து, பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவச... மேலும் பார்க்க

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்... மேலும் பார்க்க

அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும்... மேலும் பார்க்க