செய்திகள் :

16 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

post image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (23-10-2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (24-10-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-10-2024) கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, தான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதை சுட்டிகாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் தனது கடிதத்தில் வருத்தத்தோடு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என தான் நம்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பெரியார், காமராஜர் கட்-அவுட்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடல் முன்பு காமராஜர், பெரியார், நடிகர் விஜய் மற்றும் அம்பேத்கர் முழு உருவ 70 அடி உயர பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி... மேலும் பார்க்க

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.தமிழ்நாடு ... மேலும் பார்க்க

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம... மேலும் பார்க்க

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்: கே. கிருஷ்ணசாமி

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண... மேலும் பார்க்க

40 இடங்களில் 'ட்ரெக்கிங்' செல்லலாம்! - தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்றம் மேற்கொள்ளும் தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். மேலும் தமிழ்நாட்டில் 40 இடங்கள் மலையேற்றம் மேற்கொள்ள இணையவழி முன்பதிவிற்க... மேலும் பார்க்க