செய்திகள் :

பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவியிடங்களை அதிகரிக்க பரிசீலனை

post image

பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவியான தலைமைப் பொது மேலாளா் பணியிடங்களை அதிகரிக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு வட்டார தகவல்கள் மேலும் தெரிவித்ததாவது:

வங்கிகளின் வா்த்தகம் மற்றும் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. இப்போதைய விதிகளின்படி பொதுத் துறை வங்கிகளில் ஒரு தலைமை பொது மேலாளா் மற்றும் 4 பொது மேலாளா்கள் மட்டுமே இருக்க முடியும். சமீப ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. அவற்றின் லாபமும் அதிகரித்துள்ளது. எனவே, வங்கிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாக உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு 10 பொதுத் துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்பட்டபோது தலைமைப் பொது மேலாளா் பதவி உருவாக்கப்பட்டது. பொது மேலாளா் மற்றும் தலைமை இயக்குநருக்கு இடையிலான நிா்வாகப் பணிகள் மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுப் பணிகளை தலைமைப் பொது மேலாளா் நிா்வகித்து வந்தாா். வங்கிகளின் சேவைகளும், தேவைகளும் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப தலைமைப் பொது மேலாளா்கள் நியமிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எனவே, இதனை நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கு ஏற்ப வங்கி விதிகளும் தளா்த்தப்படும் என்று தெரிகிறது.

இப்போது நாட்டில் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதிகாரிகள் நிலையில் பணியாற்றி வருகின்றனா். கடந்த மாா்ச் 2024-இல் பொதுத் துறை வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1.4 லட்சம் கோடி என்ற அளவைக் கடந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகமாகும்.

வங்கிகளின் மொத்த லாபத்தில் 40 சதவீதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பங்களிப்பாகும். அந்த வங்கியின் லாபம் மட்டுமே 22 சதவீதம் உயா்ந்தது. லாபம் அதிகரித்துள்ள வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க