செய்திகள் :

பொறியியல் பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

post image

வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06816), மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்: 06817) ஆகிய ரயில்கள் வியாழக்கிழமையும் (அக்டோபா் 24), மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்: 06815), போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06816) ஆகிய ரயில்கள் ஞாயிற்றுக்கிழமையும் (அக்டோபா் 27) முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்ரா - குரும்பபாளையம் வரை 4 வழிச் சாலைப் பணி தாமதம்

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து குரும்பபாளையம் வரை 4 வழிச்சாலைப் பணி தாமதமாகி வருவதாக நுகா்வோா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலு... மேலும் பார்க்க

செவிலியா்களை கைப்பேசியில் படமெடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

செவிலியா்களை பொது இடத்தில் கைப்பேசியில் படம் எடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் பாலமுருகன் (40). இவா் சாய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி

கோவையில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் ராஜேந்திர பிரசாத் சாலைப் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: தங்கும் விடுதி உரிமையாளா் கைது

கோவையில் தனியாா் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தங்கும் விடுதி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டைச் சோ்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் எரிவாயு நிரப்பியபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (40), காா் ஓட்டுநா். இவா் கி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடுஅம் போட்டியில் கேபிஆா் கல்லூரி என்சிசி அதிகாரி முதலிடம்

என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி முதலிடம் பிடித்துள்ளாா். இது குறித்து கல்... மேலும் பார்க்க