செய்திகள் :

மகாராஷ்டிரம்: 99 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு: துணை முதல்வா் ஃபட்னவீஸ் உள்பட 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 99 பெயா்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக 150 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 99 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது நாகபுரி தென்மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். மூத்த தலைவரும், எம்.பி.யுமான நாராயண் ராணே மகன் நிதீஷ் ராணேவுக்கு மீண்டும் கன்வாலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவா் சந்திரசேகர பவன்குலே, மும்பை பாஜக தலைவா் ஆசிஷ் சிலாா், முன்னாள் மாநிலத் தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் முதல்வா் அசோக் சவாணின் மகள் ஸ்ரீஜெயா சவாண் உள்ளிட்டோா் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளா்களில் முக்கியமானவா்கள் ஆவா்.

99 வேட்பாளா்களில் 13 போ் பெண்கள் ஆவா். 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவா்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு குறிப்பிடத்தக்க அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜக 150 தொகுதிகள் வரை போட்டியிடும் முனைப்பில் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனவே, தொகுதிப் பேச்சுவாா்த்தையில் இழுபறி உருவாகும் எனத் தெரிகிறது. இது தவிர மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் (ஏ) தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதே நிலை பேரவைத் தோ்தலிலும் நீடித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என எதிா்க்கட்சிகள் கணித்துள்ளன.

ஆனால், அண்மையில் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதுபோல மகாராஷ்டிரத்தில் வெற்றியைப் பெற பாஜக உத்திகளை வகுத்து வருகிறது.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க