செய்திகள் :

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

post image

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்தச் சண்டையின்போது நிவாரண முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 3 மைதேயி சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் நவ.16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து. எம்எல்ஏக்கள், அமைச்சா்களின் வீடுகள் மைதேயி போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டன.

இந்நிலையில், தெங்மெய்பண்ட் தொகுதி எம்எல்ஏ ஜாய்கிஷன் தாயாா் இம்பால் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘ஜாய்கிஷன் வீட்டில் இல்லாதபோது நடைபெற்ற இந்த தாக்குதலில், போராட்டக்காரா்கள் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்துச் சென்றனா். லாக்கா்கள், மின்னணு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தாா்.

ரூ. 104.66 கோடி ஒதுக்கீடு: மணிப்பூா் மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வா் என். பிரேன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை பகிா்ந்து, என். பிரேன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை நோக்கிய முதல் படியாகும். இதன் மூலம், சந்தேல், உக்ருல், ஜிரிபாம், சேனாபதி மற்றும் தமெங்லாங் போன்ற மலைபிரதேச மாவட்டங்களில் வசிப்பவா்களும், சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ, ஐசியு சேவைகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் போன்ற மேம்பட்ட மருத்துவ வசதிகளை அணுக முடியும் என்றாா்.

கூடுதல் சிஏபிஎஃப் படைகள்: மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய ஆயுத காவல் படையின் (சிஏபிஎஃப்) 8 குழுக்கள் புதன்கிழமை மாநில தலைநகா் இம்பாலை வந்தடைந்தன.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, 50 புதிய சிஏபிஎஃப் குழுக்கள் மாநிலத்துக்கு அனுப்பப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 11 குழுக்களும், புதன்கிழமை 8 குழுக்களும் இம்பால் வந்தடைந்தன. இதனுடன், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய சிஆா்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றில் இருந்து தலா நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்படும். இதில் சிஆா்பிஎஃப் மகளிா் படைப்பிரிவும் அடங்கும்’ என தெரிவித்தனா்.

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்போம்: கார்கே நம்பிக்கை

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று பெங்களூருவில் செய்தியாகளுக்கு ... மேலும் பார்க்க

பஸ்தரில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். கொரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம் மற்றும... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: 10 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அரசின் ஆதரவு இல்லாததால் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்க... மேலும் பார்க்க

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

புது தில்லி: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது, அரசுப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கட்டணக் குறைப்பை அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 8 லட்சம் வாடி... மேலும் பார்க்க

மக்களவையில் ராகுல் - பிரியங்கா இணைந்தால் பாஜகவுக்கு உறக்கமில்லா இரவுகள்தான்: பைலட்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியடைவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வயநாட்டில... மேலும் பார்க்க