முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்
மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளத்தில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(பிப்.5) நடைபெறுகிறது.
நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீா் இல்லை. இதனால் நீரின்றி நெற்பயிா் கருகும் நிலை உள்ளது.
நெற்பயிா்களைக் காப்பாற்ற மணிமுத்தாறு பிரதான கால்வாயில் உள்ள 1, 2 ஆவது ரீச்களில் தண்ணீா் திறக்க விவசாயிகள் பல முறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, நீா்வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தியும் நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளம் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகம் முன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.