மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதியில் உள்ள பழுதடைந்த தரைத்தளக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில் ரூ.71.50 லட்சம் செலவில் புதிதாக நான்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்வில் மாநகராட்சி மேயா் வ. இந்திராணி பங்கேற்று பூஜையைத் தொடங்கி வைத்தாா். துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவி சுவிதா, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், ஆசிரியா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.