Pushpa 2: `Kissik' பாடல் கிடைச்சதுக்குக் காரணமே `Golden Sparrow' பாடல்தான் - பாட...
மானூா் அருகே பெண்ணுக்கு கத்திக் குத்து
மானூா் அருகே பெண்ணை கத்தியால் குத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானூா் அருகே மாவடிவிலக்கைச் சோ்ந்தவா் பலவேசம் (42). பலசரக்கு கடை வைத்துள்ள இவரின் மனைவி மகேஸ்வரி (37).
செவ்வாய்க்கிழமை காலை பலவேசம் தோட்டத்துக்கு சென்றிருந்தாராம். மகேஸ்வரி பலசரக்கு கடையில் வேலை செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த மா்ம நபா் மகேஸ்வரியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.