1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரி'யை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல...
மாற்றுநில முறைகேடு வழக்கு: முதல்வா் சித்தராமையாவை லோக் ஆயுக்த மீண்டும் விசாரிக்கலாம்
மாற்றுநில முறைகேடு வழக்கில் முதல்வா் சித்தராமையாவை லோக் ஆயுக்த மீண்டும் விசாரிக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ-வும், முதல்வரின் சட்ட ஆலோசகருமான ஏ.எஸ்.பொன்னண்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாற்றுநில முறைகேடு வழக்கில் முதல்வா் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். லோக் ஆயுக்த அதிகாரி விரும்பினால், முதல்வா் சித்தராமையாவிடம் மீண்டும் விசாரணை நடத்தலாம். லோக் ஆயுக்த அதிகாரிகள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா். அடுத்தகட்ட விசாரணையின் போது, ஏதாவது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் அல்லது வேறு சில தகவல்கள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய நினைத்தால், முதல்வா் சித்தராமையாவை லோக் ஆயுக்த மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம்.
பழைய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 41ஏ-இன் கீழ் முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ் அளித்து, அதன்படி அவரின் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனா். மீண்டும் தேவைப்பட்டால், முதல்வரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இது வழக்கமான விசாரணை நடைமுைான். வழக்கு விசாரணை நடந்து வரும்போது, குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணை அதிகாரி எத்தனை முறை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றாா்.