செய்திகள் :

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

post image

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணமாகவோ பொருளாகவோ அரசியல் கட்சியினர் அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில், சஹாகர் நகரில் பத்மாவதி வளாகத்துக்கு அருகே மினிலாரி நடத்தப்பட்ட சோதனையில் பெட்டிகளில் வெள்ளைநிறப் பைகளில், சுமார் ரூ. 138 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மினிலாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! இந்த முறை உதயநிதி விழாவில்...(விடியோ)

விசாரணையில், மும்பையில் இருந்து புணே செல்லவிருப்பதாகவும், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். இருப்பினும், இதனைச் சரிபார்ப்பதற்காக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த அக். 21 ஆம் தேதியில் மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு செல்லும் புணே சதாரா நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் சென்றவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் ``நாள் முழுவதும் உழ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அரசுத் தேர்வால் இணைய சேவை முடக்கம்!

அஸ்ஸாமில் நடைபெறவுள்ள அரசுத் தேர்வையொட்டி, அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அஸ்ஸாமில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக். 27) 28 மா... மேலும் பார்க்க

காங்கிரஸ் - பாஜக மோதலில் பாஜக தொண்டர் பலி!

அஸ்ஸாமில் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதலில் பாஜக தொண்டர் பலியானார்.அஸ்ஸாமில் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக, வியாழக்கிழமையில் (அக். 24) காங்கிரஸ் வேட்பாளர் தன்சில்... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க