செய்திகள் :

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

post image

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டுப் பயிற்சி ஆலை இயங்கி வரும் இடமானது, பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்துக்குச் சொந்தமான வளாகம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முகாம்கள் குறித்து தகவல்கள் கூறுவது என்னவென்றால், பயங்கரவாத கூட்டுப் பயிற்சி முகாம் இயங்கி வருவது மிகவும் பாதுகாப்பான இடம். அதற்கு அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தினரைத் தாண்டித்தான் பயங்கரவாத முகாமுக்குள் யாரும் நுழைய முடியும் என்கிறது அந்த தகவல்.

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்ட... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார் வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. ... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ... மேலும் பார்க்க

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க