செய்திகள் :

Apollo & Sundari Silks: அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சுந்தரி சில்க்ஸ்-ன் 'டிரேப் பிங்க்'

post image

மார்பகப் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சுந்தரி சில்க்ஸ் நிறுவனம், ஆகியவை ஒருங்கிணைந்து அக்டோபர் 22 & 23, 2024 அன்று சென்னையில் தி.நகரில் உள்ள சுந்தரி சில்க்ஸ் ஷோரூமில், இரண்டு நாள் சேலை கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வான "டிரேப் பிங்க்" என்ற முன்னெடுப்பை வெற்றிகரமாக நடத்தின.

அப்போலோ ப்ரோஹெல்த்-ன் கூட்டாண்மையோடு நடைபெற்ற, இந்நிகழ்வு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பது, கண்டறிவது மற்றும் பாதிப்பு ஏற்படுமானால் சிகிச்சையின் மூலம் அதை சரிசெய்து உயிர்வாழ்வதை மையமாகக் கொண்ட தகவல் நிகழ்வாக இது நடைபெற்றது. அரசியல் ஆளுமை, நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திருமதி குஷ்பு சுந்தர் தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்று "டிரேப்பிங்க்" என்ற சேலைகள் கண்காட்சி நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிர்வாக இயக்குநர் மிஸ். சுனிதா ரெட்டி, சுந்தரி சில்க்ஸ்-ன் நிர்வாக இயக்குநர் மிஸ், பவித்ரா மன்மோகள் மற்றும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்-ன் மார்பக புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆகியோரும், இத்தொடக்க விழாவில் முள்ளிலை வகித்தனர்.

சுந்தரி சில்க்ஸின் புடவைகள் மார்பக புற்றுநோய் ரிப்பன் வடிவில் கலைநயத்தோடும், படைப்பாக்க திறனோடும் பயன்படுத்தப்பட்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வின் அடையாளமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சின்னம்/குறியீடு, மார்பக புற்றுநோயை வென்று உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் வலிமை மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறப்பான சிந்தனையில் உருவான இந்த கண்காட்சி அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் உடன் சுந்தரி சில்க்ஸ்-ன் ஒத்துழைப்பை அழகாக எடுத்துக்காட்டியது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு என்ற சக்திவாய்ந்த செய்தியை கலாச்சார பாரம்பரியமிக்க சேலைகளுடன் ஒருங்கிணைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.

மார்பக புற்றுநோய் மீது பொது மக்களின் ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பது என்ற குறிக்கோள் மீது கொண்டிருக்கும் வலுவான அர்ப்பணிப்பை "டிரேப் பிங்க்" மறு உறுதி செய்தது. இச்சந்திப்பு அமர்வானது, மார்பக ஆரோக்கியம் பற்றி வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் மற்றும் மார்பக சுயபரிசோதனைக்கான அத்தியாவசிய உத்திகளை கற்றுக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. 25-50 வயதிற்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களது ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு தன்முனைப்புள்ள நடவடிக்கைகளை எடுக்க அதிகாரமளிக்கும் வகையில் மார்பக சுயபரிசோதனையில் 8 படிநிலைகளை விரிவாக விளக்குகிற புத்தகமான அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்-ன் ஆர்ட்கேன் என்ற பட சித்தரிப்பு புத்தகத்தை இந்நிகழ்வின் ஒவ்வொரு பங்கேற்பாளரும் பெற்றனர்.

இந்திய அரசியல் ஆளுமையும், நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான திருமதி குஷ்பு சுந்தர் இந்நிகழ்வில் பேசுகையில், "பெண்களாக, நமக்குள் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டிருக்கிறோம்; இந்த ஆற்றலை நமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக நாம் பயன்படுத்துவது மிகவும் அவசியம். 'டிரேப் பிங்கி' போன்ற முயற்சிகள், வெறும் பரப்புரை திட்டங்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணும் அவரது நலவாழ்விற்கு முன்னுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அறைகூவல்களான இவைகள் இருக்கின்றன. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்; எனவே மார்பக புற்றுநோய் தொடர்பான மௌனத்தை தகர்த்தெறிவதற்கான நேரம் இது; அச்சத்தை அகற்றி திறனதிகாரத்தைப் பெறுவதற்கான நேரம் இது. ஃபேஷன் விழிப்புணர்வோடு சங்கமிக்கிறவாறு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சுந்தரி சில்க்ஸ் இடையேயான இந்த அழகான ஒத்துழைப்பு நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். பெண்கள் அவர்களது ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தின் பொறுப்பை தங்கள் கைவசம் எடுக்குமாறு ஒருங்கிணைந்து நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று குறிப்பிட்டார்

Apollo & Sundari Silks

அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மிஸ் சுனீதா ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: "மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதனை திறம்பட நிர்வகிக்க முடியும். பெண்களுக்கு அறிவையும், விழிப்புணர்வையும் வழங்குவதன் மூலம் அவர்கள் திறனதிகாரம் பெறுவதற்கான எமது இதயப்பூர்வமான முயற்சியாக 'டிரேப்பிங்க்' இருக்கிறது. சுந்தரி சில்க்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு நடைபெறுகிற இம்முயற்சி, பாரம்பரியம் மற்றும் ஆரோக்கியத்தின் இணைவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதே நேரத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்படும் சமூகத்தை உருவாக்க இது உதவும், மார்பக புற்றுநோய்களுக்கு வெறும் சிகிச்சையளிப்பது மட்டும் எமது நோக்கமல்ல; இது குறித்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் உருவாக்கி இவை வராமல் தடுப்பதே எமது நோக்கம். மார்பக ஆரோக்கியம் பற்றிய வெளிப்படையான விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் ஊக்குவிக்கவும் மற்றும் அச்சங்களை அகற்றவும் இந்த நடவடிக்கையின் மூலம் இயலும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான படிநிலைகளாக இவைகள் இருக்கின்றன",

மார்பக புற்றுநோய் இந்தியப் பெண்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் புற்றுநோய்களுள் ஒன்றாகும்; இது ஒவ்வொரு 100,000 பெண்களில் 25.8 நபர்களை பாதிக்கிறது மற்றும் 100,000 பெண்களில் 12.7 இறப்புகளை ஏற்படுத்துகிறது. சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற நகர்ப்புறங்களில் இந்த பாதிப்பு நிகழ்வுகள் மிக அதிகமாக உள்ளன. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கை வெளிப்படுத்துகின்றன. இளம் வயது என்பது ஒரு குறிப்பிடத்தக்க இடர் அம்சமாக இருக்கிறது. எனவே சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் உயிர்களை காப்பாற்றவும் இளவயதிலேயே மார்பக புற்றுநோய் குறித்த கல்வி மற்றும் ஸ்க்ரீனிங் சோதனை போன்ற இடையீட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். (இணைப்பு}

சுந்தரி சில்க்ஸின் இயக்குநர் மிஸ் பவித்ரா மன்மோகன் பேசுகையில், “சுந்தரி சில்க்ஸில், இந்திய கலாச்சாரத்தின் செழுமையை எங்கள் சேலைகள் மூலம் நாங்கள் எப்போதும் கொண்டாடி வந்திருக்கிறோம். "டிரேப் பிங்க்" காட்சி நிகழ்விற்காக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் உடன் இணைந்து செயல்படுவது, நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வின் ஆற்றலை வெளிப்படுத்த எமது தளத்தை சிறப்பாக பயன்படுத்த எங்களுக்கு உதவியிருக்கிறது. நேர்த்தியான அழகு மற்றும் வலிமையின் ஒரு குறியீட்டு சின்னமான சேலை, மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் ஒரு சக்திவாய்ந்த சாதனமாக இதில் மாறியிருக்கிறது. உரையாடல்கள், ஒரு நிலைமாற்றத்தை கொண்டு வரும் திறன் கொண்டவை என்பதை நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்நிகழ்வு, தங்களது உடல்நலம் குறித்து ஒரு அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது" என்று குறிப்பிட்டார்.

Apollo & Sundari Silks

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டஸ்-ன் மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் மஞ்சுளா ராவ் கூறியதாவது: மார்பக புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியிருக்கும் காலகட்டத்தில், ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வேறுபாட்டை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். 'டிரேப் பிங்க்" மார்பக ஆரோக்கியம் பற்றிய முக்கியமான செய்தியை முன்னிலைப்படுத்தும் பாராட்டுதலுக்குரிய ஒரு முயற்சியாகும்; நோய் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் குறித்த காலஅளவுகளில் செய்யும் சுயபரிசோதளைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பெண்களுக்குக் கற்பிப்பதன் மூலம், கற்பிப்பதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்திற்காக தன்முனைப்புள்ள நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பதற்கு நாங்கள் ஊக்கமளிக்கின்றோம். நோய் வராமல் தடுப்பதில், நோய் குறித்த விழிப்புணர்வே முதன்மை நடவடிக்கையாகும். தாமதமின்றி மார்பக ஆரோக்கியம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஊக்குவிப்பதற்கு நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்காக இந்நிகழ்வு இருக்கிறது".

மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாக, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், #TalkPink என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. தொடங்கியுள்ளன. இந்த முயற்சியானது, மார்பக ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் வெளிப்படையாக விவாதிக்க உகந்தச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இதனால் மார்பக புற்றுநோய் குறித்த பயமும் மற்றும் களங்கமும் குறைக்கப்படுகிறது. நோய் பாதிப்பை முன்கூட்டியே தொடக்க நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது மற்றும் தங்களது மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று உன்னிப்புடன் கவனிக்க பெண்களை இது ஊக்குவிக்கிறது. #TalkPink முயற்சிகளின் மூலம், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மார்பக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தை! - Photo Album

திருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தைதிருமங்கலம் ஆட்டுச் சந்தை... மேலும் பார்க்க

Gold Purity-ஐ இப்படித்தான் Check பண்ணனுமா? | The Chennai Silks MD T.K.Chandiran Interview | PART-2

இந்த பிரத்யேக நேர்காணலில், தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சந்திரன், வெறும் 100 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் இன்று 50,000 பேருக்கு வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற எழுச... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் தீபாவளியை மங்களகரமாக தொடங்குங்கள்; தங்கத்துடன் வெள்ளியை இலவசமாக பெறுங்கள்!

1964 ஆம் ஆண்டு முதல், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நம்பிக்கைக்கு பெயர் பெற்றது. கைவினைத்திறன மற்றும் தூய்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றது. தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் வலுவான நன... மேலும் பார்க்க

சீனாவில் வேலைக்கு செல்லும் செல்லப் பிராணிகள் - ஆச்சர்யமாக இருக்கிறதா?!

ஜேன் ஜூய் (Jane xue )என்பவர் தனது இரண்டு வயதான சாமோட் (samoyed) வகை வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ஓகே(ok)என பெயர் வைத்து அதனை தென்கிழக்கு சீனாவில் உள்ள `பெட் கஃபேவுக்கு செப்டம்பர் மாதத்தில் முதல் நாளாக வேலை... மேலும் பார்க்க