செய்திகள் :

HCL Shiv Nadar: அதிக நன்கொடை வழங்கியோர்... முதலிடத்தில் ஷிவ் நாடார் - அம்பானி, அதானிக்கு என்ன இடம்?!

post image
மும்பையைச் சேர்ந்த 'Hurun India' நிறுவனம் ஆண்டுதோறும் அதிக நன்கொடைகள் வழங்கிய இந்திய நிறுவனங்களின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியலில் அம்பானி அல்லது டாடா குழுமத்தின் நிறுவனங்கள் இடம்பெறும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டு ரூ. 2,153 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக ஷிவ் நாடாரின் 'HCL' நிறுவனம் அதிக நன்கொடை வழங்கிய 'Hurun India' நிறுவனத்தின் பட்டியலில் முதல் இடம் வகித்துள்ளது. ஷிவ் நாடார் நாளொன்றுக்கு 5.7 கோடி கல்விக்காக நன்கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானியின் குழுமம் இடம்பெற்றுள்ளது (ரூ.407 கோடி). மூன்றாவது இடத்தில் பஜாஜ் குழுமம் (ரூ.352கோடி) இடம்பெற்றுள்ளது.

Hurun India' நிறுவனத்தின் டாப் 10 நன்கொடையாளர் பட்டியல்

'HCL' நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மூலைப்பொழி கிராமத்தில், 1945-ம் ஆண்டு பிறந்தவர் ஷிவ் நாடார். திருச்சி, செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தவர், தன் பள்ளி இறுதிப் படிப்புவரை அங்கேதான் பயின்றார். பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி படிப்பை முடித்தார். அதன் பிறகு, கோயம்பத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கல்லூரியில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார்.

அந்த இன்ஜினீயரிங் படிப்பு அவருக்குள் எதிர்காலத்துக்கான பல விதைகளை விதைத்தது. மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருந்த  ஐ.பி.எம் (IBM) நிறுவனம் சில அரசியல் காரணங்களுக்காக இந்தியாவைவிட்டு வெளியேறியது.

ஷிவ் நாடார்

இந்தியாவில் கம்ப்யூட்டருக்கான தேவை அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்ட ஷிவ் நாடார், 1976-ல் ஹெச்.சி.எல்’ (HCL) நிறுவனத்தை ஆரம்பிக்க பல முன்னெடுப்புகளைச் செய்தார். பிறகு அது ஐ.டி துறையில் கால்பதித்து பிரகாசிக்கத் தொடங்கியது. இன்று இந்தியாவின் முக்கியமான பெரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு பக்கம் ஐ.டி துறை, மறு பக்கம் `எஸ்.எஸ்.என் கல்லூரி, பள்ளி' என கல்வித் துறையிலும் கால்பதித்து வளர்ந்து கொண்டிருக்கிறார் ஷிவ் நாடார். சென்னை அடையாரின் மிகப்பெரிய அளவில் ஷிவ் நாடார் உலகத்தரமான பள்ளி ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`35 நாள்களில் 48 லட்சம் திருமணங்கள்' - இந்த கல்யாண சீசனில் அதிக வணிகம் நடக்கும் தொழில்கள் என்னென்ன?

வரவிருக்கும் திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணித்துள்ளது அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (CAIT). நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை 35 நாள்களுக்குள் திருமணங்களால் மட்டும் 6 லட்சம் ... மேலும் பார்க்க

Bharat Tex 2025: "உள்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் பங்கேற்பர்" - கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்

புதுடெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள 'பாரத் டெக்ஸ் - 2025' என்ற பெயரிலான ஜவுளி கண்காட்சிக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கூட்டமானது கரூர், ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்... மேலும் பார்க்க

Adani: `நவம்பர் 7-க்குள் ரூ.7,200 கோடி செலுத்தாவிட்டால்...' - வங்க தேச அரசுக்கு கெடு விதித்த அதானி

வங்காள தேசம் நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனம் கடன் கொகையை செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலரைக் (7,200 கோடி ரூபாய்) க... மேலும் பார்க்க