செய்திகள் :

Bharat Tex 2025: "உள்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் பங்கேற்பர்" - கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்

post image

புதுடெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள 'பாரத் டெக்ஸ் - 2025' என்ற பெயரிலான ஜவுளி கண்காட்சிக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கூட்டமானது கரூர், ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்றது.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், விசைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கரூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்களுக்கு ஜவுளி கண்காட்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாரத் டெக்ஸ் - 2025

அதனைத் தொடர்ந்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஜவுளித்துறை சார்ந்த அனைத்து துறைகளும் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற பாரத் டெக்ஸ் - 2023 கண்காட்சி என்பது பிரதமரின் கனவு ஆகும். தற்போது நடைபெறக் கூடிய இரண்டாவது ஜவுளி கண்காட்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் இங்கே நடந்தது. உலக அளவில் ஜவுளி துறைக்கான மிகப் பெரிய கண்காட்சியாக இது இருக்கும். கடந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் உள்நாட்டில் சுமார் 1 லட்சம் பேரும், வெளிநாட்டிலிருந்து 3000 பேரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு உள்நாட்டிலிருந்து இரண்டு லட்சம் பேரும், வெளிநாட்டிலிருந்து சுமார் 10,000 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் கண்காட்சியைப் பார்வையிட வரக் கூடிய வெளிநாட்டவர்களுக்கு, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவைச் செய்து தரப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கரூரிலிருந்து 40 ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று உள்நாட்டில் பல்வேறு ஆர்டர்களை பெற்றனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஜவுளித்துறை சார்ந்த நபர்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது" என்றார்.

HCL Shiv Nadar: அதிக நன்கொடை வழங்கியோர்... முதலிடத்தில் ஷிவ் நாடார் - அம்பானி, அதானிக்கு என்ன இடம்?!

மும்பையைச் சேர்ந்த 'Hurun India' நிறுவனம் ஆண்டுதோறும் அதிக நன்கொடைகள் வழங்கிய இந்திய நிறுவனங்களின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியலில் அம்பானி அல... மேலும் பார்க்க

`35 நாள்களில் 48 லட்சம் திருமணங்கள்' - இந்த கல்யாண சீசனில் அதிக வணிகம் நடக்கும் தொழில்கள் என்னென்ன?

வரவிருக்கும் திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணித்துள்ளது அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (CAIT). நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை 35 நாள்களுக்குள் திருமணங்களால் மட்டும் 6 லட்சம் ... மேலும் பார்க்க

Adani: `நவம்பர் 7-க்குள் ரூ.7,200 கோடி செலுத்தாவிட்டால்...' - வங்க தேச அரசுக்கு கெடு விதித்த அதானி

வங்காள தேசம் நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனம் கடன் கொகையை செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலரைக் (7,200 கோடி ரூபாய்) க... மேலும் பார்க்க

GRT: 'Iconic Brand of India 2024' என்ற விருதை பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 'Iconic Brand of India 2024" என்ற விருதை பெற்று ஜொலிக்கிறது.ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தூய்மை, நம்பிக்கை. மற்றும் தனிச்சிறப்பிற்கு இணையான பெயராக விளங்க... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: களைகட்டிய திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை! | Photo Album

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள், கறிக்கடைக்காரர்கள், பொது மக்கள் என அதிகாலை முதல் ஆடுகளுடன் குவிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். செம்மறி ஆடுகள், வெள்... மேலும் பார்க்க