செய்திகள் :

தாராவியின் கதை: குடிசைகளை கோபுரமாக்க அடுத்தடுத்து டெண்டர்; களத்தில் இறங்கிய அதானி | பகுதி 4

post image
மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

மும்பையில் 52 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தனர். ஆனால் அந்த குடிசைகள் படிப்படியாக தனியார் பில்டர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. ஆனால் தாராவியில் இருக்கும் குடிசைகள் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆங்காங்கே ஓரிரு கட்டடங்கள் மட்டும் கண்ணில் தென்படுகிறது. அக்கட்டடங்களின் மாடியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை குடிசைகள் மட்டும்தான் தென்படும்.

நாடு முழுவதுமிருந்து வந்த புலம்பெயர்ந்து வந்த மக்களால் உருவாக்கப்பட்ட தாராவி, 593 ஏக்கர் கொண்டது. மத்திய ரயில்வேயில் சயான் ரயில் நிலையம், மாட்டுங்கா ரயில் நிலையம், கிங் சர்க்கிள் ரயில் நிலையம், மேற்கு ரயில்வேயில் மாகிம் ரயில் நிலையம், மாட்டுங்கா ரோடு ரயில் நிலையங்களுக்கு மத்தியில் தாராவி அமைந்திருப்பதால் அங்கிருந்து மும்பையின் எந்தப்பகுதிக்கு வேண்டுமானாலும் எளிதில் சென்றுவிட முடியும்.

தாராவி குடிசைப்பகுதி

அதுவும் மேற்கண்ட ரயில் நிலையங்களுக்கு நடந்தே சென்றுவிட முடியும். தாராவி பெயரில் ரயில் நிலையம் இல்லாவிட்டாலும் தாராவியை சுற்றிலும் ரயில் நிலையங்களும், மெட்ரோ ரயில் நிலையங்களும் இருக்கிறது. இங்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசைகள் இருப்பதாக ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கீழ் தளத்தில் இருக்கும் குடிசைகள் ஆகும். ஒவ்வொரு குடிசையிலும் இரண்டடுக்கு அல்லது மூன்றடுக்கு இருக்கிறது. இதனையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2 லட்சம் குடிசைகள் வரை இருக்கும் என்கிறார்கள். 2007-ம் ஆண்டுதான் தாராவியில் முதல் முறையான தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மூலம் குடிசைகள் எத்தனை இருக்கிறது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 47 ஆயிரம் குடிசைகளும், 13 ஆயிரம் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் குடிசையின் மேல் பகுதியில் இருக்கும் வீடுகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இக்குடிசைகள் ஒவ்வொன்றும் 100 சதுர அடிகூட இருக்காது. சில குடிசைகள் பெரியதாக இருந்தாலும், அதிகமான குடிசைவாசிகள் தங்களது வீட்டை இரண்டு அல்லது மூன்று பகுதியாக பிரித்து சிறு சிறு குடிசைகளாக மாற்றி வாடகைக்கு விட்டு இருக்கின்றனர்.

மும்பையில் மத்திய பகுதியில் இருக்கும் தாராவி, பில்டர்களின் அடுக்குமாடி தங்கமாக இருந்தாலும், அதனை யார் எடுத்துக்கொள்வது என்பதில் கடந்த 20 ஆண்டுகளாக போட்டி இருந்து கொண்டே இருந்தது. தாராவியில் குடிசை மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒன்று 2004ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ் ராவ் தேஷ்முக் முதல்வராக இருந்தபோதுதான் அறிமுகம் செய்யப்பட்டது. தாராவியில் இருக்கும் குடிசைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்தார்.

இதனால் உடைந்த சாக்கடையில் இருந்து தெருக்களில் தேங்கிக்கிடக்கும் சாக்கடை நீரில் தினம் தினம் நடப்பது, பக்கெட்டில் தண்ணீரை தூக்கிக்கொண்டு கழிவறைக்காக ரயில் தண்டவாளத்தை நோக்கிச்செல்வது, தண்ணீருக்காக தெருக்களில் வரிசையில் நிற்பது போன்ற எண்ணிலடங்காத பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று தாராவி மக்கள் மிகவும் நம்பினர். 2000ம் ஆண்டுகளில் தாராவியில் கழிவறைகள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும். குடிசைகளுக்குள் கழிவறை இருக்காது. 80 சதவீத குடிசைகள் கழிவறை இல்லாமல் தான் இருந்தது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மகாராஷ்டிரா அரசு தாராவியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று சொன்னவுடன், அடுக்குமாடி குடியிருப்பு உடனே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். மகாராஷ்டிராவில் ஒவ்வொரு அரசு வரும்போதும் தாராவி குடிசை புனரமைப்பு திட்டம் குறித்து பேசுவார்கள். அதன் பிறகு அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். அடுத்த அரசு வரும் போதும் இதே தொடர் கதையாகத்தான் இருந்தது. அதேசமயம் குடிசை புனரமைப்பு திட்டத்தை காரணம் காட்டி தாராவியில் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்த குடிசை புனரமைப்பு திட்டங்களுக்கு அரசு அடியோடு தடை விதித்தது. இதனால் தனியார் பில்டர்கள் குடிசைகளை இடித்துவிட்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட முடியாமல் போனது. எனவே மக்கள் தொடர்ந்து குடிசையில் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதோடு இடையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையும் தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தை வெகுவாக பாதித்து. இதனால் தமிழர்கள் குடும்பம் பெரியதானதால் கோழிக்கூண்டு போன்ற குடிசைகளில் வாழ முடியாமல் வீடுகளை விற்பனை செய்துவிட்டு மும்பை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற ஆரம்பித்தனர்.

தாராவி

மகாராஷ்டிரா அரசு 2007-ம் ஆண்டு தாராவியை 5 செக்டர்களாக பிரித்து மேம்படுத்த முடிவு செய்து சர்வதேச அளவில் மாநில அரசு டெண்டர் கோரியது. இத்திட்டத்தில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் அடுத்து வந்த பொருளாதார நெருக்கடி மற்றும் இவ்விவகாரத்தில் மாநில அரசின் தெளிவற்ற கொள்கை போன்ற காரணங்களால் இத்திட்டத்தில் இருந்து கம்பெனிகள் பின்வாங்கின. இதனால் 2011-ம் ஆண்டு இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதோடு தாராவியில் குடிசைகளை கணக்கெடுத்த போது அதில் 40 சதவீத குடிசைவாசிகள் மட்டுமே இலவச வீடு பெற தகுதியானவர்களாக இருந்தனர். இதனால் இத்திட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசு கருதியது.

2011ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான வீட்டுவசதி வாரியமான மஹாடாவிடம் 5வது செக்டரை மட்டும் கொடுத்து மேம்படுத்தும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டது. மஹாடா நிறுவனமும் தாராவியில் தன்னிடம் இருந்த காலி நிலத்தில் மட்டும் சில கட்டிடங்களை கட்டி அதில் 266 குடும்பங்கள் மட்டும் குடியமர்த்தியது. எஞ்சிய நான்கு செக்டர்களுக்கு மீண்டும் டெண்டர் விட்ட போது எந்த நிறுவனமும் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. 2018ம் ஆண்டு மாநில அரசு மீண்டும் தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்திற்கு டெண்டர் விட்டது.

இம்முறை இத்திட்டத்தில் அதானி நிறுவனமும் கலந்து கொண்டது. ஆனாலும் டெண்டர் திறக்கப்பட்டதில் ஐக்கிய அரேபிய எமிரேட் நாட்டை சேர்ந்த சீலிங் என்ற நிறுவனம் கொடுத்திருந்த டெண்டர் அரசுக்கு அதிக வருவாய் கொடுப்பதாக கொடுத்திருந்தது. இதனால் அந்த நிறுவனம் தாராவி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் அந்நிறுவனத்திற்கு மாநில அரசு பணி ஆர்டர் ஆர்வம் காட்டாமல் இழுத்தடித்தது. இறுதியில் அதனை 2020ம் ஆண்டு மாநில அரசு ரத்து செய்துவிட்டது. அதன் பிறகுதான் உள்ளே அதானி நிறுவனம் வந்தது.

தொடரும்..!

புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், ப... மேலும் பார்க்க

TVK: `எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த்...' - நடிகர்களின் அரசியல் பிளாஷ்பேக்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. நம் நாட்டில் அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்ததாகவே இருந்துவருகிற... மேலும் பார்க்க

TVK: இறுதிக்கட்டத்தில் தவெக மாநாட்டு வேலைகள்... பார்வையிட்ட புஸ்ஸி ஆனந்த் | Photo Album

தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்... மேலும் பார்க்க

`நீங்கள் துணை முதல்வரா.. தமிழின எதிர்ப்பாளரா? உங்கள் பதவி பறிக்கப்படுமா?'- உதயநிதிக்கு வானதி கேள்வி

தமிழக அரசு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நீங்கள் துணை முதல்வரா? அல்லது தமிழின எதிர்ப்பாளரா? என உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீ... மேலும் பார்க்க

TVK: தவெக மாநாட்டில் அஞ்சலையம்மாள் கட் அவுட்; யார் இந்த `தென்னாட்டு ஜான்சி ராணி'?

தனது திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசியும், மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களால் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் அரசியலுக்கு வருவதை வெளி... மேலும் பார்க்க

`வேலுமணிக்கு ஒரு நியாயம்... வைத்திக்கு ஒரு நியாயமா..?' - ஓ.பி.எஸ் மீது கடுப்பில் ஆதரவாளர்கள்

திடீர் ரெய்டு..!வைத்திலிங்கம்ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின்மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவை மட்டுமல்லாமல், அ.தி.மு.க வட்டாரங்களை மொத்தமாகவே ஒ... மேலும் பார்க்க