செய்திகள் :

திருவாரூர்: "பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிற்காது..." - அரசுக் கல்லூரி மாணவர்கள் வேதனை

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரி பகுதியில், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் பிரதான சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக இருந்து, 2020-ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி தொடங்கப்பட்ட 2011-ல் கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லமல் இருந்தது. அதனால், கல்லூரிக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளியே மாணவர்கள் இறங்கும் சூழல் இருந்தது.

கல்லூரி அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம்

இந்த நிலையில், பல கோரிக்கைகளுக்குப் பிறகு கல்லூரிக்கு அருகில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனாலும் தற்போதுவரை கல்லூரி அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் செல்வது மாணவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்கள் வேதனை

இதுகுறித்து கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம் பேசியபோது, ``நான் இந்த காலேஜ்ல ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன். ஆலத்தம்படியில் பஸ் ஏறுவேன். என்னோட சேர்த்து இந்த காலேஜ்ல படிக்கிற 28 மாணவர்கள் பஸ்ல வருவாங்க. நான் காலேஜ்ல சேர்ந்த ஆரம்பத்துல காலேஜுக்கு பக்கத்துல பஸ் ஸ்டாண்ட் இல்லனு காரணம் காட்டி, காலேஜ்ல இருந்து கொஞ்சம் தள்ளி எங்களை இறக்கி விட்டுட்டு போயிடுவாங்க.

2022-னு நினைக்கிறேன்... எங்க காலேஜ்ல இருக்குற இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) முன்னெடுத்த போராட்டத்தால, இப்போ காலேஜுக்கு பக்கத்திலேயே பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சு. ஆனா பஸ் மட்டும் அந்த ஸ்டாப்பிங்ல நிறுத்துறது இல்ல. ஒருமுறை இது சம்பந்தமா என்னோட பஸ்ல டிராவல் பண்ண ஜூனியர் பையன் கண்டக்டர் கிட்ட பஸ்ஸ நிறுத்த சொல்லிக் கேட்டான். அப்போ அந்த கண்டக்டர், 'நீங்க பஸ்ல தொங்கிக்கிட்டு வருவீங்க நாங்க உங்களை கரெக்டான பஸ் ஸ்டாப்ல இறக்கி விடணுமா'னு பதில் சொன்னார். அப்போவே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்தது.

கல்லூரி அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம்

நாங்க வரக்கூடிய பஸ் மட்டும் இல்லாம, திருவாரூரிலிருந்து வர கவர்ன்மண்ட் பஸ் எல்லாமே காலேஜுக்கு பக்கத்துல உள்ள பஸ் ஸ்டாப்ல நின்னா எங்களுக்குக் கொஞ்ச நேரமும், எங்க எனர்ஜியும் மிச்சமாகும். காலேஜ் பக்கத்துல பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிக்காம போறதுதான் எங்களுக்கு வருத்தமா இருக்கு" எனத் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

மாணவர் சங்கம் உறுதி

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.லெ. சுகதேவ்விடம் பேசினோம், "ஆரம்பத்தில் கல்லூரியின் அருகாமையில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பதால் தினசரி பேருந்துகள் நிற்காமல் சென்றன. எங்கள் அமைப்பில் உள்ள சக தோழர்களுடன் இது குறித்தான போராட்டத்தை முன்னெடுத்தோம். பிறகு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. ஆனாலும் அரசு பேருந்து நிற்காமல் செல்கிறது என்ற தகவல்களை கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை நீடித்தால், எங்கள் அமைப்பின் சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டார்.

கல்லூரி அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம்

அதிகாரிகள் சொல்வதென்ன?

இதுகுறித்து பேசிய திருவாரூர் பேருந்து நிலைய கிளை மேலாளர் நடராஜன், ``திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு A5A என்ற ஒரு பேருந்துதான் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்துதான் கிட்டத்தட்ட பத்து சர்வீஸுக்கு மேல் திருவாரூருக்கு பேருந்து செல்கிறது." என எதையோ கூறி சமாளித்தார்.

தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பேருந்து நிலைய கிளை மேலாளர் ஜெயசங்கரனிடம் பேசியபோது, ``ஆரம்பத்தில் அந்தக் கல்லூரிக்குப் பக்கத்தில் பேருந்து நிறுத்தம் கிடையாது. எனவே ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் மாணவர்களை இறக்கிவிட்டு சென்று வந்தோம். ஆனால் தற்போது கல்லூரிக்குப் பக்கத்திலேயே குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை இறக்கி விடுகிறோம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வரும் பேருந்து, புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்பதில்லை என மாணவர்கள் புகார் அளிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க