செய்திகள் :

`தீபாவளி' ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் - ஒரே நாளில் இவ்வளவா?!

post image
தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டில் இறங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலூர் மாவட்டத்தில், காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டை - ஆந்திர எல்லையில் செயல்பட்டு வரும் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடி, அங்குப் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் வீடு, திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூர் ஆகிய இடங்களிலுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. மேற்கண்ட இந்த இடங்களில், நேற்று ஒரே நாளில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத 14,18,110 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

காட்பாடி

வேலூர், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளே அனுமதிக்க அங்குப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுவதாகப் புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அங்கு வலை விரித்தது. அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி என்பவர் பணியில் இருந்தார். அவரது அலுவலகத்தில் இருந்து 1,38,900 ரூபாய் பணம் சிக்கியது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தியை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அங்கு சொத்து தொடர்பாக இருந்த 6 ஆவணங்களையும், ரூ.4.45 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். கணக்கில் வராத இந்த தொகைக் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று மாலை 4 மணிக்கு உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், இரவு 8 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் அங்கு இருந்த ஒருவரிடம் இருந்து 72,500 ரூபாயைக் கைப்பற்றினர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அலுவலகத்திலுள்ள சுவாமி படங்களின் பின்புறம், ஜன்னல்களின் இடுக்குகள், டிபன்பாக்ஸ், அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. சந்தேகப்பட்டு கழிவறை மற்றும் பவர் ரூமில் தேடியபோது 53,510 ரூபாய் ரொக்கப்பணமாக சிக்கியது. ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவலறிந்ததும் கழிவறையில் பணத்தை பதுக்கியதாகத் தெரியவந்திருக்கிறது. அதே சமயம், அலுவலக நுழைவு வாயில் கதவைப் பூட்டி ரெய்டில் ஈடுபட்டதால், சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத 4 பேரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இடைத்தரகர்கள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்தும் 51,700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம்

அதேபோல, ஒரு இளம் ஜோடியும் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் இருந்தனர். யார் அவர்கள்? என விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்த இளம்பெண், அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரிந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு, தங்களின் திருமணத்தை பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் வெளியே காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், இளம் ஜோடியின் பெற்றோர்களை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து, திருமணத்தையும் பதிவு செய்ய வைத்து தம்பதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பரபரப்பான ரெய்டுக்கு இடையே, இந்தத் திருமண பதிவு சில நிமிடங்கள் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தின.

தண்டராம்பட்டு:

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டுக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்குப் பத்திரங்கள் பதிவுச் செய்ய வந்திருந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 98,900 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தண்டராம்பட்டு சார்பதிவாளர் கதிரேசனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

தீபாவளி ரெய்டு

அதிகாரிகள் காட்டில் பணமழை...

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பிடிபட்டிருக்கிறது. கணக்கில் காட்டப்படாத இந்தத் தொகை குறித்து தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் (பொறுப்பு) சீனிவாசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேபோல, தருமபுரி மாவட்டம், அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3,57,600 ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியிருக்கிறது. இந்த அலுவலகத்தை கடந்த 3 நாள்களாக நோட்டமிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. பண்டிகைக் காலங்களில் அதிகாரிகள் காட்டில் பணமழைக் கொட்டுவதும், அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருள்கள் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டன. மற்றத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே, தீபாவளி வரை ரெய்டு படலம் தொடரலாம் எனத் தகவல்கள் வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`+91-xxx..’ உள்நாட்டு அழைப்பு போன்றே வரும் வெளிநாட்டு மோசடி அழைப்புகள் - புதிய அமைப்பின் பலன் என்ன?

டிஜிட்டல் மயமாகி வரும் நாட்டில் அதிகரித்து காணப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், உள்நாட்டு எண்கள் போலவே, போலியாக வரும் சர்வதேச அழைப்புகளைத் தடுக... மேலும் பார்க்க

Dengue: டெங்குவால் நிகழும் உயிரிழப்புகள் குறைந்திருக்கிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளைத் தமிழக... மேலும் பார்க்க

`ரயில்வே கம்பளிப் போர்வை' - வெளியான RTI தகவல்; நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க செய்ய வேண்டிதென்ன?

ரயிலில் ஏசி பெட்டிகளின் பயணம் செல்லும்போது, அங்கு வழங்கப்படுக்கிற வெள்ளை நிற போர்வைகளையும் கம்பளிப் போர்வையையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்தப் போர்வைகள் சுத்தமாக பராமரிக்கப்படுக... மேலும் பார்க்க

வயநாடு: `தந்தைக்காக 17 வயதில் பிரசாரம்; இன்று எனக்காக..!” - சென்டிமென்ட் பிரியங்கா

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி‌ பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் 13 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சி... மேலும் பார்க்க

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்... மேலும் பார்க்க