செய்திகள் :

`+91-xxx..’ உள்நாட்டு அழைப்பு போன்றே வரும் வெளிநாட்டு மோசடி அழைப்புகள் - புதிய அமைப்பின் பலன் என்ன?

post image
டிஜிட்டல் மயமாகி வரும் நாட்டில் அதிகரித்து காணப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், உள்நாட்டு எண்கள் போலவே, போலியாக வரும் சர்வதேச அழைப்புகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் ஒரு புதிய கண்காணிப்பு அமைப்பை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'உள்வரும் ஏமாற்று அழைப்புகள் தடுப்பு அமைப்பு'( ‘International Incoming Spoofed Calls Prevention System’) என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பை செவ்வாயன்று அறிமுகம் செய்து வைத்தார். பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கவும், சைபர் குற்றத்திலிருந்து குடிமக்களைக் காக்கவும், தொலைத்தொடர்புத் துறையின் முக்கிய முயற்சியாக இந்த அமைப்பினை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து அரசு தரப்பில் விவரித்தனர்.

சர்வதேச அழைப்புகளை உள்ளூர் இந்திய எண்களாக (எ.கா., +91-xxxxxxxxx) காண்பிக்கும் தந்திரத்தின் மூலமாக சைபர் குற்றவாளிகள் நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அழைப்பு வரி அடையாளத்தை (CLI) மாற்றுவதன் மூலம், இந்த அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், இந்தியாவிற்குள்ளேயே இருப்பது போல் காட்டப்படுகின்றன. இத்தகைய மோசடியான அழைப்புகளை கண்டறிந்து, மோசடி செய்பவர் தனது இலக்கினை அடையும் முன்பே மோசடியை தடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த அமைப்பு அக்டோபர் 17-ம் தேதி செயல்படத் தொடங்கியது என்றும், முதல் 24 மணி நேரத்திற்குள் சுமார் 13.5 மில்லியன் ஏமாற்று அழைப்புகளை கண்டறிந்து தடுத்துள்ளது என்றும் அரசின் அறிக்கைகள் தெரிவிக்கிறது. இது உள்வரும் அனைத்து சர்வதேச அழைப்புகளில் 90 சதவீதமாகும்.

"இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் நிறுவப்பட்டுள்ள இந்த அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் +91-xxxxxxx எண்கள் கொண்ட இதுபோன்ற ஏமாற்று மோசடி அழைப்புகளில் குறிப்பிடத்தக்க குறைவைக் காண வேண்டும்" என அரசின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் கால்

ஜூலை மாதம், சென்ட்ரலைஸ்டு இன்டர்நேஷனல் அவுட் ரோமர் (CIOR) என்ற பெயரில் இந்த அமைப்பை நிறுவ தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) நிதி அமைச்சகம் ரூ.38.76 கோடியை ஒதுக்கீடு செய்தது. கூடுதலாக, டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவுக்கான (DIU) நிதியுதவி மூலம் தொலைத்தொடர்பு ஆதாரங்களின் தவறான பயன்பாடு, மோசடி, ஸ்பேம் அழைப்புகள், செய்திகள் உட்பட்டவற்றை சீர்படுத்த 50 கோடி ரூபாய் நிதி 2024 ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 85 கோடி ரூபாயாக 2025 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடியான தகவல்தொடர்புகள் குறித்த புகார்களை சஞ்சார் சாத்தி தளத்தில் சக்ஷு வசதி மூலம் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளைவுகள் எப்படி இருக்கும்?

ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது ரஷ்யா- உக்ரைன் போர். முன்பை விட மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த போரில், ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை ... மேலும் பார்க்க

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க