செய்திகள் :

சுழலுக்கு ஏற்ற ஆடுகளம்: உணவு இடைவேளை; அஸ்வின் 2 விக்கெட்டுகள்!

post image

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றது.

இந்நிலையில் நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை 92/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

டெவான் கான்வே 47 (108 பந்துகள் 5*4) ரன்களுடனும் ரச்சின் ரவீந்திரா 5 (13 பந்துகளில்) களத்தில் இருக்கிறார்கள்.

டாம் லாதம் 15, வில் யங் 18 ரன்களுக்கு அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாட் ஹென்றிக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னர் அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது 43 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அல... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை படைத்த அஸ்வின்!

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.இந்த டெஸ்டில் 2 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் அஸ்வி... மேலும் பார்க்க

மிர்பூர் டெஸ்ட்: தெ.ஆ. வரலாற்று வெற்றி..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம்!

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் மிா்பூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்... மேலும் பார்க்க

புணே டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக நியூஸி. முதலில் பேட்டிங்!

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்க... மேலும் பார்க்க

சூர்யகுமாரின் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராஸா..!

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. சர்வதேச டி20 கிரிக்க... மேலும் பார்க்க

டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..! 344 ரன்கள்!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. ஐபிஎல் அண... மேலும் பார்க்க