செய்திகள் :

என் பிரச்னைக்கு தீர்வே இல்லையா என்று கலங்குகிறீர்களா? ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமத்தில் சங்கல்பியுங்கள்!

post image

2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்

எத்தனையோ ஹோமங்கள் செய்யப்பட்டாலும் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் மட்டுமே சகல பிரச்னைகளுக்குமான பரிகார ஹோமமாக விளங்குகிறது என்கிறார்கள் ஆன்றோர்கள். சக்தி வாய்ந்த ஹோமமான இது, காரிய வெற்றி, செல்வ வளம், தீய சக்திகள் அழிய, நோய்கள் விலக, மங்கல விஷயங்கள் தடையின்றி நடைபெற நடத்தப்படுகிறது. அதே வேளையில் உலக சுபீட்சம், ஒற்றுமை, அமைதி ஆகியவற்றிற்காகவும் நடத்தப்படுகிறது.

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் அண்ட சக்திகளுடன் நம்மை இணைத்து வைத்து ஸ்ரீலலிதாவின் ஆசியுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அபூர்வ வழிபாடு. எந்த நோக்கத்திற்காக இந்த ஹோமத்தில் கலந்து கொண்டாலும் அது நிறைவேறும் என்பது வாக் தேவதைகளின் வாக்காக ஆன்மிகம் கூறுகிறது. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறையானத் தாக்கங்களை விலக்கி, மன அமைதியையும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, ஆயுளையும் அதிர்ஷ்டத்தையும் இந்த ஹோமம் அளிக்கிறது. நமது உண்மையான வேண்டுதலை நிறைவேற்றவும், தெய்வீக ஆற்றலைப் பெறவும் இந்த ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.

ஸ்ரீதேவி லலிதாவின் பக்தர்களின் பிரச்னைகள் தீர, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் உபயோகமாகும் விதமாக வாக் தேவதைகள் இந்த ஹோம வழிபாட்டுக்காக பஞ்ச தசாஷரி மந்திரத்தை உருவாக்கினர். ஆதி பராசக்தியின் அருளைப் பெறுவதற்கான இந்த ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லாவித ஹோமத்தையும் செய்த பலன்களை பெறலாம் என்பது சிறப்பு. ஆதி சக்தியான ஸ்ரீலலிதா சிவமும் சக்தியும் இணைந்து உருவான ஆதி வடிவம் என்கின்றன புராணங்கள். அம்பிகையின் முதல் வடிவமான ஸ்ரீலலிதா அக்ஷர வடிவமாகவும் எழுந்தாள். அக்ஷரத்தில் இருந்தே மந்திரங்கள் தோன்ற வேண்டும் என்பதால் அன்னை எடுத்த அருள் வடிவம் இது.

ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஓம் என்ற முதல் அக்ஷர பிரணவத்தில் வர்ணம், பதம், மந்திரம் என்ற சக்தி அம்சங்களும், தத்துவம், புவனம், கலை என்ற சிவ அம்சங்களும் தோன்றின. மூலமான பிரணவ அக்ஷரத்திற்கும் அதில் இருந்து தோன்றிய பதினெட்டு வித்தைகளுக்கும் காரணமாக இருப்பவள் ஸ்ரீலலிதா. அவளே சிவத்தையும் தன்னுள் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களுக்கும் காரணியாக இருக்கிறாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீபுரத்தில் அக்ஷர லலிதாவாக எழுந்தருளிய தேவி, மண்ணுலகில் ரிஷ்யசிருங்கரால் அக்ஷர வடிவில் எழுந்தருளினாள்.

ரிஷ்யசிருங்கரின் புத்திரகாமேஷ்டி யாகத்தால் தசரதர் புத்திரர்களை அடைந்தார் என்று காவியங்கள் கூறுகின்றன. ராமாயண காலத்தில் அம்பிகையின் சிறப்புமிக்க அக்ஷரங்களை குறியீடாகக் கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்க லலிதாம்பிகை கோயில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் அமைந்துள்ளது. இலங்கை மன்னன் இராவணனை போரில் வீழ்த்த ராமபிரான் இந்த அம்மனின் ஆலயத்தில் சிறப்புமிக்க ஸ்ரீபஞ்ச தசாஷரி யாகம் செய்த பின்னரே இராவணனை வெற்றி பெற்றார் என்பது நம்பிக்கை. சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் 2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தால் தெய்வ பலமும். உடல் பலமும் மனோபலமும் அதிகரிக்கும். ஆயுள் விருத்தி உண்டாகும், உங்களின் எல்லா விருப்பங்களையும் வேண்டுதல்களையும் சிறப்பாக நிறைவேற்றித் தரும். ஸ்ரீலலிதாவின் அருள் ஸித்திப்பதற்கும், மகாயோகினிகள் உங்களை எப்போதும் பாதுகாக்கவும் இந்த ஹோமம் உதவும்.

QR CODE ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

எல்லா யுகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதி நர்மதா! 'நமாமி தேவி நர்மதே' நூல் வெளியீடு

நர்மதா அன்னையின் புகழ் பாடும் நூல் ஒன்று சனிக்கிழமை ( 26/10/24) காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நூலை எழுதி, வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தவர் திருமதி ரமா சுப்பிரமணியன்.narmadha river worship நா... மேலும் பார்க்க

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: எதையெல்லாம் வேண்டுகிறோமோ அவையெல்லாம் நிறைவேறும் அதிசயம்!

என்னவெல்லாம் வேண்டி வழிபடுகின்றோமோ அதற்கான அருளைத்தரும் ஆற்றல் படைத்த மகாசக்தி ஸ்ரீஅக்ஷ்ர லலிதாம்பிகை. ராமாயண காலத்தில் அக்ஷ்ர ங்களை குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்க ... மேலும் பார்க்க

தெய்யம் திருவிழா: மனிதர்களுடன் உறவாடும் கரீம் குலிகன் தெய்யம்! | Exclusive Album

கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிக... மேலும் பார்க்க