செய்திகள் :

அகில இந்திய தொழிற் தேர்வில் 29 மாணவ, மாணவியர் முதலிடம்: முதல்வரை சந்தித்து வாழ்த்து

post image

சென்னை: தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர்கள் மற்றும் பயிற்றுநர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (அக் 24) தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த 29 மாணவ, மாணவியர்களும்

மற்றும் காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் ஒருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-2024-ஆம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது.

இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க |ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

இதில், 24,853 (94.72%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 (87.64%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியர் என மொத்தம் 41,591 (91.74%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே தொழில்துறை ரோபாட்டிக்ஸ் தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவன் என்.அந்தோணிசேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என். மோகன பிரியா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு. பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் எஸ். மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த மாணவி கே. இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் என மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 29 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் (சிஐடிஎஸ்) பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுர் வி. ஸ்வேதா, வெல்டர் தொழிற் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவியரும் மற்றும் 1 பயிற்றுநரும் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம... மேலும் பார்க்க

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்: கே. கிருஷ்ணசாமி

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண... மேலும் பார்க்க

40 இடங்களில் 'ட்ரெக்கிங்' செல்லலாம்! - தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்றம் மேற்கொள்ளும் தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். மேலும் தமிழ்நாட்டில் 40 இடங்கள் மலையேற்றம் மேற்கொள்ள இணையவழி முன்பதிவிற்க... மேலும் பார்க்க

வரும் ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்!

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு தீபாவளியை பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி கொண்... மேலும் பார்க்க

பாலாற்றில் பொங்கிய நுரையுடன் ஓடும் வெள்ளநீர்: விவசாயிகள், கிராம மக்கள் வேதனை

பெருமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத... மேலும் பார்க்க

நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (அக்.24) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்... மேலும் பார்க்க