Basics of Share Market 11: போர்ட்ஃபோலியோ, ஃபேஸ் வேல்யூ... ஷேர் மார்க்கெட்டும் முக்கிய வார்த்தைகளும்!
நேற்றைய தொடர்ச்சியான பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்று பார்ப்போம்...
போர்ட்ஃபோலியோ: நீங்கள் பங்குச்சந்தையில் என்னென்ன பங்குகள், பத்திரங்கள்...ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்ற லிஸ்டே போர்ட்ஃபோலியோ. இன்னும் எளிதாக புரிய சொல்ல வேண்டுமானால், பங்குச்சந்தை முதலீட்டின் பயோ டேட்டா, போர்ட்ஃபோலியோ.
ஃபேஸ் வேல்யூ: ஒரு பங்கின் குறைந்தபட்ச தொகையாக அந்த பங்கை முதன்முதலாக முதலீடு செய்தபோது குறிப்பிடப்பட்ட தொகை. அதாவது இந்த தொகை அந்த பங்கின் மினிமம் கேரண்டி தொகை.
காளையும், கரடியும்: பங்குச்சந்தையில் காளை, கரடி என்ற வார்த்தைகள் அடிக்கடி அடிப்படும். பங்குச்சந்தை ஏறுமுகத்தில் சென்றால் காளை, இறங்குமுகத்தில் சென்றால் கரடி.
லார்ஜ், மிட், ஸ்மால் கேப் ஸ்டாக்: வளர்ச்சி, வருமானம் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில், செபி ஒன்றிலிருந்து 100 வரை ரேங்க் செய்யும் கம்பெனிகள் பங்குகள் லார்ஜ் கேப் ஸ்டாக். 101 - 250 ரேங்க் பெறப்படும் கம்பெனிகள் மிட் கேப் ஸ்டாக். 251-ல் இருந்து ரேங்க் செய்யப்படும் கம்பெனிகள் ஸ்மால் கேப் கம்பெனிகள்.
52 வார உச்சம் / குறைவு: ஒரு பங்கின் விலை 52 வாரத்தில் (1 வருடத்தில்) எந்த பெரிய தொகையில் வர்த்தகம் ஆகி இருக்கிறதோ, அது 52 வார உச்ச விலை. இதுவே குறைவான தொகையில் வர்த்தகம் ஆகியிருப்பது 52 வார குறைவு விலை.
லிக்விடிட்டி: ஒரு பங்கை விற்கும்போது, அதை எவ்வளவு எளிதாக சிக்கலின்றி பணமாக மாற்ற முடிகிறது என்பதற்கு லிக்விடிட்டி என்று பெயர்.
வோலடாலிட்டி (Volatility): ஒரு பங்கின் ஏற்ற, இறக்கங்கள் தான் வோலடாலிட்டி என்று கூறப்படுகிறது.
நாளை: டிரேடிங், டிமேட் கணக்கு என்றால் என்ன?!