செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததன் காரணமாக, நேற்று(அக். 19) காலை வினாடிக்கு 18,384 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நீர்வரத்து இன்று(அக். 20) காலை வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க:கவரப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு பிரிவில் வழக்கு!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 95.88 அடியிலிருந்து 96.90அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 60.89 டிஎம்சியாக உள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பத்த... மேலும் பார்க்க

விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரு... மேலும் பார்க்க

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று(அக். 20) 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வடதமிழக... மேலும் பார்க்க

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (... மேலும் பார்க்க

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் சென்னையில் நாளை(அக். 21) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க