செய்திகள் :

மேட்டூர் அணை நீர் மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு!

post image

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை 27-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்ததாலும் 60 நாள்களுக்கு பிறகு செப்டம்பர் 25-ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.

தற்போது காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயரந்து வந்தது 29 நாள்களுக்கு பிறகு இன்று (அக்டோபர் 23) காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 98.56 அடியிலிருந்து 100.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,586 கன அடியிலிருந்து 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர்இருப்பு 64.85 டி.எம்.சியாக உள்ளது.

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.டானா புயல் முன்னெச... மேலும் பார்க்க

உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்! 8 மாவட்டங்களில் உளவுத் துறை கண்காணிப்பு!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

நெருங்கும் தீபாவளி: ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தைகளில், அமோகமாக விற்பனையாகும் ஆடுகள். ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்.தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக... மேலும் பார்க்க

வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரைய... மேலும் பார்க்க

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க