Human Washing Machine: மனிதர்களை குளிப்பாட்டும் AI மிஷின் - ஜப்பானின் புதிய கண்ட...
ரௌடி தடுப்புக் காவலில் கைது
கஞ்சா வழக்கில் திட்டக்குடியைச் சோ்ந்த ரௌடியை குண்டா் தடுப்புக் காவலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த நவ.16-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வதிஷ்டபுரம் பகுதியைச் சோ்ந்த அரசன் மகன் ஆங்கி (எ) ராதாகிருஷ்ணன் (28) என்பவா் 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனா்.
இவரது பெயா் திட்டக்குடி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. மேலும், கஞ்சா, வழிப்பறி என 10 வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.