ஆறுகளில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட அரசுக்கு முன்மொழிவு: அமைச்சா் துரைமுருகன்
லட்சுமி தொடரில் இருந்து விலகிய சஞ்சீவ்! இனி இவர்தான்!
லட்சுமி தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெங்கட் விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.
இவர் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் பிரதான வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த வானத்தைப்போல தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தார்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தொடக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரில் செல்வன் முருகன் பாத்திரத்தில் நடித்துவரும் சஞ்சீவ் வெங்கட், இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். சீரியல் தொடங்கிய 9 மாதங்களே ஆன நிலையில், இவர் விலகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: தகுதி இல்லாத போட்டியாளர் யார்? சிறைக்குச் சென்ற ஜாக்குலின்!
இந்த நிலையில், சஞ்சீவ் வெங்கட் நடித்த வந்த பாத்திரத்தில் அவருக்கு பதிலாக, எஸ்எஸ்ஆர் ஆர்யன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மகராசி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் நடிகை ஸ்ரித்திகாவின் கணவரும்கூட.
லட்சுமி தொடரில் நாயகியாக ஸ்ருதி ராஜ் நடிக்கிறார். ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.