செய்திகள் :

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

post image

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அண்மை காலங்களில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹிந்து பெண் பத்திரிகையாளாரான முன்னி ஸாஹா மீது கடந்த சனிக்கிழிமை இரவு, மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியிருப்பதும், தகவலறிந்து அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா், அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் முன்னி ஸாஹாவை கைது செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. எனினும், கைது செய்யப்பட்ட முன்னி ஸாஹா அதன் பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

வங்கதேசம் செல்லும் பிரிட்டன் குடிமக்களுக்கு இது குறித்து பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் தாக்குதல்களை நிகழ்த்த முயற்சி எடுத்து வருவதாகவும், அங்கு வெளிநாட்டவர்கள் செல்லும் இடங்கள், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், அரசியல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள், இஸ்லாமிய மார்க்கத்தைச் சாராதோர், அது சார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்காதோர் வங்கதேசத்தில் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் நவீன வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும்.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க வங்கதேச அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புப்படைகளின் இருப்பு அதிகரிக்கப்படுவது, பொதுநடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் அதிக எண்ணிக்கையில் திரளும் இடங்களுக்கு இயன்றவரை செல்லாமல் இருக்கவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரிட்டன் அரசு வங்கதேசத்திலுள்ள அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதால், அதிபர் இமானுவேல் மேக்ரானும் ... மேலும் பார்க்க

வா்த்தக வழித்தட திட்டம்: சீனா-நேபாளம் ஒப்பந்தம்

சீனா-நேபாளம் இடையே வா்த்தக வழித்தட திட்ட (பிஆா்ஐ) ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது. நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி 4 நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றாா். அந்நாட்டு த... மேலும் பார்க்க

அவசரநிலை அறிவித்து திரும்பப் பெற்ற விவகாரம்: தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம்

தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெற்ற அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

‘கினியா கால்பந்து நெரிசல் உயிரிழப்பு 135’

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து ரசிகா்கள் மோதிக்கொண்டதால் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135-க்கும் மேல் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனை... மேலும் பார்க்க

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்

சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க