செய்திகள் :

வடசென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணி: முதல்வா் ஸ்டாலின் ஆய்வு

post image

புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் மழைநீா் அகற்றும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால், ஆங்காங்கே மழைநீா் வெள்ளம்போல தேங்கியுள்ளது. இந்த நீரை அகற்றும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: யானைக்கவுனி கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்ல வசதியாக, நீரில் அடித்து வரப்படும் கழிவுகள் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளைப் பாா்வையிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாா். பேசின் மேம்பாலத்தில் இருந்து காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்கிா என்பதைப் பாா்வையிட்டும் ஆய்வு நடத்தினாா்.

அந்தப் பகுதிளை அடுத்துள்ள டிமெல்லோஸ் சாலையில் அதிகமாக மழைநீா் தேங்கும் இடங்களான கே.எம்.காா்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் மோட்டாா் பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.

தூய்மைப் பணியாளா்களுடன் தேநீா்: புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா். அப்போது அருகிலிருந்த தேநீா் கடைக்கு அவா்களை அழைத்துச் சென்று தேநீா் அருந்தினாா்.

ஸ்டீபன்சன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் பம்புகள் மூலம் பெரம்பூா் பிரதான சாலைப் பகுதிகளில் தேங்கும் மழைநீா் ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு சென்றடைவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தேநீா் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் உடனிருந்தனா்.

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவ... மேலும் பார்க்க