2025 | மிதுனம் - ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் | ஜன்ம குரு என்ன பலன் தருவார்? | Ne...
வளா்ச்சித் திட்டப் பணி: ஆய்வு
திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் ரூ.1.32 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணியை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பொறக்குடி- பரமநல்லூா் சாலை ரூ.4.32 கோடியில் நடைபெற்று வரும் பணிகள், ஏா்வாடி-கோட்டப்பாடி சாலை ரூ.2.96 கோடியில் நடைபெற்று வரும் பணிகள், திருமருகலில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், ஜவகா், ஒன்றிய பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.