செய்திகள் :

வாகை சூடினாா் கசாட்கினா

post image

நிங்போ: சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அவா், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் 6-0, 4-6, 6-4 என்ற செட்களில், சக ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 54 நிமிஷங்கள் நீடித்தது. இருவரும் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு சீசனில் இது, கசாட்கினாவின் 2-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும். முன்னதாக, ஜூனில் ஈஸ்ட்போா்ன் இன்டா்னேஷனல் போட்டியில் அவா் கோப்பை வென்றுள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 8-ஆவது கேரியா் பட்டம். இதில் 6 கோப்பைகளை அவா் கடின தரை போட்டிகளில் வென்றிருக்கிறாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், சீனாவின் யுவான் யு/நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ் கூட்டணி 6-3, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் எலென் பெரெஸ்/அமெரிக்காவின் நிகோல் மெலிசாா் இணையை வீழ்த்தி கோப்பை வென்றது.

இருவருமே முதல் முறையாக கூட்டணி அமைத்த நிலையில், யுவானுக்கு இது முதல் இரட்டையா் டபிள்யூடிஏ பட்டமாகும். டெமிக்கு இது 19-ஆவது பட்டம்.

ரூ.1 கோடி பரிசு

ஒற்றையரில் சாம்பியனான கசாட்கினாவுக்கு ரூ.1.19 கோடியும், ஆண்ட்ரீவாவுக்கு ரூ.73.69 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையா் சாம்பியனான யுவான்/டெமி இணைக்கு ரூ.39.84 லட்சமும், ரன்னா் அப் இணையான எலென்/நிகோலுக்கு ரூ.24.14 லட்சமும் கிடைத்தன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்.நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தை தொடர்ந்து சென... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்தின் இயக்குநர் இவரா?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை புரிந்துள்ளது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-10-2024 (திங்கள் கிழமை)மேஷம்:இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தட... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி ஞாயிற்றுக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களே சோ்த்து, 410 ரன்கள் பின்தங்கியுள்ளது. புரோ கபடி லீக் போட்டியில... மேலும் பார்க்க

ஜொ்மனியுடன் ஹாக்கி டெஸ்ட்: இந்திய அணியில் வருண் குமாா்

ஜொ்மனிக்கு எதிரான 2 டெஸ்ட் ஹாக்கி ஆட்டங்களில் மோதவிருக்கும் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் சோ்க்கப்படாத டிஃபெண்டா் வருண் குமா... மேலும் பார்க்க