செய்திகள் :

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேயை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தார். தற்போது ஒர்லி தொகுதி எம்.எல்.ஏ-வாக ஆதித்ய தாக்கரே இருக்கிறார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும் முதல்வரானார். தற்போது சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு எதிராக ஒர்லி தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முயன்று வருகிறது. ஆனால் இது வரை அக்கட்சிக்கு வலுவான வேட்பாளர் கிடைக்கவில்லை.

ராஜ், உத்தவ்

உத்தவ் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தங்களது பக்கம் இழுத்து வந்து தேர்தலில் நிறுத்த ஏக்நாத் ஷிண்டே முயன்றார். ஆனால் அந்த நபர் உத்தவ் தாக்கரேயை விட்டு வர மறுத்துவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு தகவல்கள் கூறுகின்றனர். உத்தவ் தாக்கரே தனது உறவினர் வருண் சர்தேசாயையும் இம்முறை மும்பை பாந்த்ரா கிழக்கு தொகுதியில் போட்டியிடவைக்க திட்டமிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயும் மிகவும் பரபரப்பாக நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கியவுடன் தனித்து நின்று 2009ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதியில் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் விளங்கிய நவநிர்மாண் சேனா படிப்படியாக செல்வாக்கை வெகுவாக இழந்து, இப்போது அக்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.மட்டுமே இருக்கிறது.

ராஜ் தாக்கரே கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டார். இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று ராஜ் தாக்கரே சந்தித்து பேசினார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்லி அனுப்பி வைத்தார். சட்டமன்ற தேர்தலிலும் நவநிர்மாண் சேனாவை பா.ஜ.க கழற்றிவிட்டுவிட்டது.

இதனால் பெரும்பாலான தொகுதியில் தனித்து போட்டியிட ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்கான வேலையில் ராஜ் தாக்கரே தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதோடு தனது மகன் அமித் தாக்கரேயையும் இத்தேர்தலில் களம் இறக்க ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் நவநிர்மாண் சேனா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் தாக்கரே தானும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆவலாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ராஜ் தாக்கரேயும் தனது மகனை தேர்தலில் நிறுத்த முடிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் அனைவரும் ஆதித்ய தாக்கரேயிக்கு எதிராக அமித் தாக்கரேயை நிறுத்தும்படி ராஜ் தாக்கரேயிடம் தெரிவித்தனர். ஆனால் அது சரியாக இருக்காது என்று கருதி அமித் தாக்கரேயை வேறு தொகுதியில் நிறுத்த ராஜ் தாக்கரே திட்டமிட்டுள்ளார். அதாவது சிவசேனா தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியை உள்ளடக்கிய மாகிம் தொகுதியில் அமித் தாக்கரேயை தேர்தலில் நிறுத்த ராஜ் தாக்கரே முயன்று வருகிறார்.

இது குறித்து நவநிர்மாண் சேனாவின் மூத்த தலைவரான நிதின் சர்தேசாயிடம் பேசியபோது, ''அமித் தாக்கரே தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் மாகிம் தொகுதியில் போட்டியிட ஆலோசித்து வருகிறார். மாகிம் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தலில் எங்களது கட்சி இரண்டாவது இடம் வந்திருக்கிறது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதா சர்வான்கர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு சென்றுவிட்டார். எனவே எங்களது கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது'' என்றார். மாகிம் தொகுதியில் அமித் தாக்கரே போட்டியிட்டால் அதில் உத்தவ் தாக்கரே வேட்பாளரை நிறுத்த மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்ட போது அவரது தொகுதியில் ராஜ் தாக்கரே வேட்பாளரை நிறுத்தவில்லை. அதே முறையை சகோதரர்கள் இருவரும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ் தாக்கரேயிக்கு நாசிக், புனே, கல்யான், டோம்பிவலி பகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.

Pannun Murder Plot: காலிஸ்தான் தலைவரை கொல்ல ஸ்கெட்ச்; Ex-RAW Agent மீதான FBI புகாரும் பின்னணியும்

அமெரிக்க குடியுரிமையை பெற்ற இந்திய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன்னை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக விகாஸ் யாதவ் என்ற இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி ம... மேலும் பார்க்க

`முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்; திராவிடம் என்பது இனம் அல்ல இடம்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை!

வேலூரில், பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``பகுத்தறிவு பற்றிப் பேசுகிற இந்த திராவிட கூட்டத்திற்கு நாகரிகம் தெரியவில்லை. ஒரு ... மேலும் பார்க்க

Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

"ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ... மேலும் பார்க்க

`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல...’ - காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ - நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடர... மேலும் பார்க்க