ஆறுகளில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட அரசுக்கு முன்மொழிவு: அமைச்சா் துரைமுருகன்
விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
புயல் வெள்ளம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை
ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 29,30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.