RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
விவசாயிகளுக்கு காரீப் பருவத்தில் 117.4 மெட்ரிக்.டன் விதை நெல்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப் பருவத்தில் 117.4 மெட்ரிக் டன் விதை நெல் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 1,053 மெட்ரிக் டன்னும், டிஏபி 162 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 921 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1,317 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 3,453 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் நெற்பயிா் சாகுபடிக்காக கோ 50, சிஆா் 1009 உள்ளிட்ட நெல் ரகங்கள் 26.440 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள், கம்பு - கோ 10, சோளம் கோ 32, கே12 ஆகியவை 46.500 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூா் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு நவம்பா் 2024 வரை 590.27 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, நவம்பா் மாதம் முடிய 16,675 ஹெக்டா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறைசாா்பில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி 3.24 லட்சம் டோஸ்கள் பெறப்பட்டு, முகாம் கடந்த 11-ஆம்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வியாழக்கிழமை வரை 2,86,700 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கு.விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சாா்-ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.