செய்திகள் :

வெள்ளத் தடுப்புப் பணிகள்: வெள்ளை அறிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கு மழைவெள்ள கால்வாய்கள் முழுமையாக தூா்வாராததே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. 20 செ.மீ. வரை மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீா்கூட தேங்காது என்று முதல்வரும், அமைச்சா்களும் மாறிமாறி கூறிய நிலையில், 4 மணி நேர மழையையே சென்னை தாங்கவில்லை. இதில், இரண்டு நாள்களுக்கு வானிலை மையம் வேறு ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பொருள்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினா் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

என்ன ஆனது திருப்புகழ் அறிக்கை?: சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு 2021-இல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த திட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் திமுக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும் நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு, போா்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவ... மேலும் பார்க்க