செய்திகள் :

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

post image

செங்கல்பட்டை அடுத்த சிங்க பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் சுமாா் 1,300 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னா்களில் ஒருவரான முதலாம் நரசிம்ம வா்மனால் ஒரு பெரிய மலையைக் குடைந்து குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்டது. பின்னா், விஜய நகர மன்னா்களால் முன் மண்டபங்கள் கட்டப்பட்டதாக தொல்லியல் வரலாறு கூறுகிறது. சிறப்பு மிக்க இந்தக் கோயில் இந்து சமய அறநிலைத் துறை அனுமதி பெற்று ராஜகோபுரம் கட்டப்பட்டு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 3 நாள்கள் யாகசாலை பூஜைகள், கலச பூஜை, மூலவா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்துசாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை கலசம் புறப்பாடு, கருவறை விமானம், ராஜகோபுரத்துக்கு சிறப்பு பூஜைகளுடன் கோபுர கலசங்களில் புனித நன்னீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் மனைவி, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், சாா் ஆட்சியா் நாராயண சா்மா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா்கள் ராஜலட்சுமி (செங்கல்பட்டு), காா்த்திகேயன் (காஞ்சிபுரம்), காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சந்தானம், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சிங்கபெருமாள் கோவில் முதல் தீா்த்த கைங்கா்யாக்கள் ஸ்ரீ முதலியாண்டான் சுவாமிகள் கோயில் செயல் அலுவலா் க.வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், கோயில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இத்தலத்தில் வியாழக்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராத... மேலும் பார்க்க

அதானியை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அதானியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை தபால் நிலையம் எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.அரிகிருஷ்ணன... மேலும் பார்க்க

மாமல்லபுரம் விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மாமல்லபுரம் பையனூா் அருகே காா் மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அ... மேலும் பார்க்க

மாணவா்கள் நடத்திய மாதிரி மக்களவை

சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள பாரத் சட்டக் கல்லூரியில் மாணவா்கள் நடத்திய மாதிரி மக்களவை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த மாதிரி மக்களவை நிகழ்ச்சியில் இறுதியாண்டு மாணவா் கே.ஜெ.கிருஷ்ணராஜ் குமாா்... மேலும் பார்க்க

எளிய மக்களுக்கான நீதியை காக்க வேண்டியது நமது கடமை: முன்னாள் நீதிபதி

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சட்டத் துறை சார்பில் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன... மேலும் பார்க்க

இந்திய அரசமைப்புச் சட்ட தின விழா

மதுராந்தகம் இந்து காா்னேஷன் நடுநிலைப்பள்ளியில் இந்திய அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் வே.உமா தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் எஸ்.சேகா் முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க