அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியா் துப்பாக்கிச் சூடு
மாமல்லபுரம் விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
மாமல்லபுரம் பையனூா் அருகே காா் மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பையனூா் அருகே பண்டிதமேடு கிராமத்தில் தங்களது மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமா்ந்து பேசிக்கொண்டிருந்த 5 பெண்கள் மீது கல்லூரி மாணவா்கள் சென்ற காா் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சாலை விபத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி அவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வீதம் காசோலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.