செய்திகள் :

12,000 ஒப்பந்தப் பணியாளா்களை மாநகராட்சி பணிவரன்முறைப்படுத்த உள்ளது: அதிஷி

post image

தில்லியில் செவ்வாய்கிழமை நடைபெறும் மாநகராட்சி அவைக் கூட்டத்தில் 12,000 ஒப்பந்தப் பணியாளா்களை மாநகராட்சி பணிவரன்முறைப்படுத்த உள்ளதாக ஆம் ஆத்மி மூத்தத் தலைவா் அதிஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எம்சிடி மேயா் மகேஷ் கிஞ்சி, துணை மேயா் ரவீந்தா் பரத்வாஜ் மற்றும் அவைத் தலைவா் முகேஷ் கோயல் ஆகியோருடன் பங்கேற்ற தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான எம்சிடியில் தற்காலிக ஊழியா்களை பணிவரன்முறைப்படுத்த ஆம் ஆத்மி உறுதிபூண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் 4,500 (ஒப்பந்த) தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்துள்ளோம்.

இந்நிலையில், பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி அவைக் கூட்டத்தில், துப்புரவுத் தொழிலாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள், மூத்த பொறியாளா்கள், தோட்டக்காரா்கள் மற்றும் பிற ஒப்பந்தப் பணியாளா்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் மேலும் 12,000 பணியாளா்களை முறைப்படுத்த உள்ளோம்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு தற்காலிக ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிலாளா்களின் உரிமைகளுக்காக ஆம் ஆத்மி கட்சி உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தற்போது 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளா்களை பணி வரன்முறைப்படுத்தும் முடிவு தில்லி நகரின் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும்.

அதேவேளையில், பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்ப்பதற்காக அவ்வப்போது சாக்குப்போக்குகளைக் கூறி வருகிறது. பாஜக தனது வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான், புதிய முதல்வா் நியமிக்கப்படுவதற்கு முன்னா், தில்லி அரசு அதன் நிதி நிலையைத் தெளிவாக முன்வைத்திருந்ததை உறுதிப்படுத்தினோம்.

ஆம் ஆத்மி அரசின் கீழ் தில்லியின் பொருளாதார வளா்ச்சியைப் பொருத்தம்டில், 2015-இல் கட்சி முதன்முதலில் ஆட்சி அமைத்தபோது, நகரத்தின் பட்ஜெட் ரூ.30,000 கோடியாக இருந்தது. மத்திய அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்றாலும், தில்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினோம். இன்றைக்கு, 2024-25-க்கான பட்ஜெட் ரூ.77,000 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 2.5 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகிறது என்றாா் அதிஷி.

தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!

தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் அதிஷி!

தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் முதல்வா் அதிஷியை கட்சி எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுத்தனா். இதன் மூலம் அதிஷி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் . த... மேலும் பார்க்க

புற்றுநோய் மையங்கள் உள்கட்டமைப்பிற்கான ஆய்வு தொடக்கம்: மத்திய அரசு தகவல்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை... மேலும் பார்க்க

நொய்டா: திருமண ஊா்வல துப்பாக்கிச்சூட்டில் குழந்தை இறந்த சம்பவத்தில் முக்கிய நபா் கைது

சில நாள்களுக்கு முன்பு நொய்டாவில் நடந்த திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூட்டின் போது இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவம் தொடா்பாக முக்கிய நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க

குரிகிராம் அருகே கிராமத்தில் அம்பேத்கா் சிலை சேதப்பட்டதால் பதற்றம்

குருகிராம் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலா கிராமத்தில் அம்பேத்கா் காலனியில் உள்ள பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சில மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் நிலவுவதாக போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

எகிப்துக்கு தப்ப முயன்ற சைபா் மோசடி நபா்: சென்னை விமான நிலையத்தில் கைது

எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை குருகிராம் போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல் துறையின் சைபா் பிரிவு உதவி காவ... மேலும் பார்க்க