செய்திகள் :

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டும் மீண்டது.

இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகள் அதிக அளவு கொள்முதல் செய்ததும், உலகளாவிய ஸ்திரத்தன்மை போக்கும் இதற்கு மேன்மேலும் வழிவகுத்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 218.14 புள்ளிகள் உயர்ந்து 81,224.75 புள்ளிகளில் நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் 384.54 புள்ளிகள் உயர்ந்து 81,391.15 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.20 புள்ளிகள் உயர்ந்து 24,854.05 புள்ளிகளாக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி துறைகள் சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக வங்கிப் பங்குகள் 1 சதவிகிதம் வரை உயர்ந்தன.

இதையும் பார்க்க : மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவை துவக்கம்

வாரத்தின் கடைசி நாளான இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கியதால் சந்தை சற்றே மீண்டது.

செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.29 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,401.26 கோடியாக இருந்ததையடுத்து அதன் பங்குகள் 6 சதவிகிதம் உயர்ந்தது.

இன்றை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

ப்ளூ சிப் பங்குகளான இன்போசிஸ் அதன் இரண்டாவது காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் 4 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகளும் சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று (வியாழக்கிழமை) ரூ.7,421.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இருப்பினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,979.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தன. சியோல் சரிந்தும், அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிந்தது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.07 சதவிகிதம் குறைந்து 74.40 அமெரிக்க டாலராக உள்ளது.

செப்டம்பரில் மிதமாக உயா்ந்த இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் மிதமாக உயா்ந்து 3,458 கோடி டாலராக பதிவாகியுள்ளது. இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த இரண்டு மாதங்க... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம்!

தொழில் நுட்பத் துறையில் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் முன்பே அறிமுகமான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள... மேலும் பார்க்க

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி துறை பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது.நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தைகள் இன்று(அக். 17) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,758.07 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையி... மேலும் பார்க்க