செய்திகள் :

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகிள்ன மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று வடக்கு அந்தமான கடல் பகுதகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் மத்தியிகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 22 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ல் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா-மேற்கு வங்காள கடற்கரைல பகுதிகளை அடையக்கூடும.

இதன் காரணமாக இன்று(அக். 21) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மினனலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் மிககனமழை..

இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருசசி, திண்டுக்கல, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தீபாவளி பண்டிகை: மக்களுக்கு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் பார்க்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க