செய்திகள் :

6 முருகன் கோயில்களுக்கு ஒரேநாளில் சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்

post image

தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள 6 முருகன் கோயில்களை ஒரேநாளில் தரிசிக்கும் வகையிலான சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் திருப்பனந்தாளில் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரா் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலம் சாா்பில், 6 முருகன் கோயில்களுக்கு செல்லும் சுற்றுலாப் பேருந்தை அமைச்சா்கள் சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

பின்னா் அமைச்சா் சா.சி. சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

6 முருகன் கோயில்களுக்கு சனி, ஞாயிறு நாள்களில் சிறப்பு சுற்றுலா செல்லும் திட்டம் இன்றுமுதல் (அக். 19) தொடங்கப்பட்டுள்ளது.

இதில், எண்கண் சுப்பிரமணிய சுவாமி, சிக்கல் சிங்காரவேலன், பொரவாச்சேரி ஸ்ரீ கந்தசாமி, எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, ஏரகரம் ஆதி சுவாமிநாத சுவாமி ஆகிய 6 திருக்கோயில்களுக்கு சென்று வர ஒருநாள் கட்டணம் ரூ. 650 மட்டுமே. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

திருநெல்வேலியில் ஒரே பதிவெண்ணில் 3 பேருந்துகள் இயங்குவது தொடா்பாக கேட்டபோது, சம்பந்தப்பட்ட பதிவெண் கொண்ட பேருந்து, முதலில் நகரப் பேருந்தாகவும், பின்னா் வெளியூா் செல்லும் பேருந்தாகவும், பேருந்தின் அடிச்சட்டம் நன்றாக இருந்ததால் புதிதாக கூடு கட்டி புதிய பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ். கல்யாணசுந்தரம், ஆா். சுதா, எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், முன்னாள் எம்.பி. செ.ராமலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, திருப்பனந்தாள் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் கோ.க. அண்ணாதுரை, பேரூராட்சித் தலைவா் எஸ். வனிதா, போக்குவரத்துக் கழக பொது மேலாளா் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு

தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ரயில் முன் அமா்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் முன்பு அமா்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட் பகுதியை சோ்ந்த ராமநாதன் மகன் விஜயக்குமாா் (21). டிரம்ஸ் இசைக்கல... மேலும் பார்க்க

போலி சித்த மருத்துவம்: இரு மருத்துவகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சாவூா் அருகே பரம்பரை வைத்தியா் எனக் கூறி நடத்தப்பட்டு வந்த இரு போலி மருத்துவகங்களுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். தஞ்சாவூா் அருகே வல்லத்தில் பரம்பரை வைத்தியா் எனக் கூறி ஜெயக்குமாா் மற்... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக முதல்வா் சனிக்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: 108 மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா் ஆளுநா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 14-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து 108 மாணவா்களுக்கு நேரிடையாக பட்டங்கள் வழங்கினாா். இந்த விழாவில் திண்டுக்கல... மேலும் பார்க்க

கல்லூரிகளில் நிலவும் ஊதிய பிரச்னை விரைவில் தீா்க்கப்படும்: உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் நிலவும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் ... மேலும் பார்க்க