செய்திகள் :

7-ஆவது சுற்றும் 'டிரா': குகேஷ் முதலில் ஏற்றம்; பின்பு ஏமாற்றம்

post image

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டி.குகேஷ் } நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் மோதிய 7}ஆவது சுற்றும் செவ்வாய்க்கிழமை டிரா}வில் முடிந்தது.

இரு போட்டியாளர்களும் தொடர்ந்து 4}ஆவது சுற்றை டிரா செய்திருக்கின்றனர். போட்டி பாதி கட்டத்தை கடந்திருக்கும் நிலையில், இருவருமே தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் தொடர்கின்றனர்.

முன்னதாக, 6}ஆவது சுற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், ஓய்வு நாளான திங்கள்கிழமைக்குப் பிறகு 7}ஆவது சுற்றில் குகேஷ் } லிரென் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இந்தச் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ் சற்று சாதகமான சூழலை சந்திக்க, அவரின் அதிரடியான தொடக்க நகர்வுகளால், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய லிரென் சற்று நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு கட்டத்தில் நீண்ட நேரமாக தோற்கும் நிலையிலேயே லிரென் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் குகேஷ் செய்த தவறான 45}ஆவது நகர்வால், லிரென் அந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இவ்வாறு விறுவிறுப்பாக 5 மணி நேரம், 22 நிமிஷங்கள் நீடித்த இந்தச் சுற்றை, 72 நகர்த்தல்களுக்குப் பிறகு டிரா செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்தனர்.

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் தற்போது 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த சுற்று புதன்கிழமை நடைபெறுகிறது. போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டுபவர் சாம்பியனாவார் என்பது நினைவுகூரத்தக்கது.

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டீசர்!

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானத... மேலும் பார்க்க

ரைபிள் கிளப் டிரைலர்!

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.அனுராக் இயக்கத்த... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.14 சுற்றுகளைக் கொண்ட ... மேலும் பார்க்க

மம்மூட்டி - கௌதம் மேனன் பட டீசர்!

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்ற... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: தகுதி இல்லாத போட்டியாளர் யார்? சிறைக்குச் சென்ற ஜாக்குலின்!

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்... மேலும் பார்க்க