செய்திகள் :

Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

post image

நன்றி: விகடன்இணையதளம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. புஷ்பா படத்துக்காகவே அவருக்கு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிலையில் அல்லு அர்ஜூனைப் பார்க்க 1600 கி.மீ. பயணம் செய்திருக்கிறார் ரசிகர் ஒருவர். உத்தரப் பிரதேசம் அலிகார் பகுதியில் இருந்து ஹைதராபாத் வரை சைக்கிளில் அர்ஜூனை சந்திக்க 1600 கி.மீ. பயணம் செய்திருக்கிறார். இறுதியாக ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்த அவர், நெகிழ்ச்சியுடன் தனது பயணம் குறித்துக் கூறியிருக்கிறார்.

Allu Arjun

அவருக்கு பூச்செடியை பரிசாக வழங்கி இருக்கிறார் அல்லு அர்ஜூன். அதுமட்டுமின்றி அந்த ரசிகர் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து இன்ஸ்டா பக்கத்தில் அந்த ரசிகர் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “இறுதியாக என் ஹீரோவை நேரில் சந்தித்துவிட்டேன். அவர் உண்மையில் மிகவும் இனிமையானவர். என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரை நேரில் சந்தித்தது மிகவும் எமோஷனலான அனுபவமாக இருந்தது.

என்னுடைய பெற்றோர்களின் ஆசிர்வாதம் மற்றும் ஃபாலோயர்ஸ்களால் எனது கனவு நனவானது” எனப் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சல்மான் கானை பார்க்க அவரது ரசிகர் ஒருவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து சைக்கிளில் 1000 கி.மீ. பயணம் செய்து மும்பைக்கு சென்று அங்கு சல்மான் கானைப் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"**"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

அது ஒரு ஏப்ரல் மாதத்தின் உச்சந்தலையில் உளி வைத்து அடிக்கும் வெயில் பொழுது...ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பாலய்யாவின் வீடு பரபரப்பில் இருந்தது. காவல்துறை வாகனங்களும், அவரது தனியார் பாதுக... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

வணக்கம் மக்களே... 'பாலய்யா வஸ்தாவய்யா' தொடருக்குக் கலவையான கமென்ட்டுகளும் ரகளையான ரியாக்‌ஷன்களுமாய் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.பலர், "செம சூப்பரு...ஃபுல் ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடு தல!" என்று வாழ்த... மேலும் பார்க்க

Devara Review: பக்கா ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்!

செங்கடல் என்றொரு கடல். அதன் அருகில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன.அந்த நான்கு கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள். தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்), பைரா (சயீஃப் அலி கான்), குஞ்சாரா - கோரா (கலையரசன், சைன் ... மேலும் பார்க்க