செய்திகள் :

Basics of Share Market 4 : பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?!

post image

'பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்கறதெல்லாம் சரி...நான் ஏன் அதுல முதலீடு செய்யணும்?' என்ற கேள்வி எழலாம். நீங்கள் அரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை பெருக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

'பங்குச்சந்தையில் முதலீடு செய்வது ரிஸ்க்' என்று நினைத்து, வங்கி சேமிப்பு கணக்கு, ஆர்.டி, எஃப்.டி போன்ற ஆப்ஷன்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆம்...பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சற்று ரிஸ்க் தான். ஆனால் லாபம் அதிகம். எப்படி என்று பார்ப்போம்...

வங்கி சேமிப்பு கணக்கில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி 4 சதவிகிதம். ஆர்.டி முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி 7 சதவிகிதம். ஆனால், பங்குச்சந்தையில் கிடைக்கும் வட்டி விகிதமோ 12 சதவிகிதம்...சில நேரங்களில் இதற்கு மேல்கூட கிடைக்கலாம்.

ரிஸ்க் தான்...ஆனால் லாபம் அதிகம்

நமக்கு வங்கி சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டியும், ஆர்.டிக்கு வரும் வட்டியும் இப்போதிருக்கும் பணவீக்கத்திற்கு நிச்சயம் கட்டுபடியாகாது. பணவீக்கத்தை எளிதாக விளக்க வேண்டுமானால், நாம் சிறு வயதில் கடைக்கு ஒரு ரூபாய் எடுத்து சென்றால், 25 பைசாவிற்கு நான்கு மிட்டாய்களை வாங்கி வருவோம். ஆனால், இப்போது அதே ஒரு ரூபாயை எடுத்து சென்றால் ஒரு மிட்டாய் மட்டுமே வாங்க முடியும். ஆண்டுக்கு ஆண்டு பொருள்களின் விலை உயரும். இப்போது விற்கும் அதே விலைக்கே ஒரு பொருளை பத்து ஆண்டுகள் கழித்து வாங்க முடியாது. அதனால், வளர்ந்து வரும் பணவீக்கத்திற்கு 4 சதவிகித வட்டியோ, 7 சதவிகித வட்டியோ போதாது.

இதையும் தாண்டி, முதலீடு செய்வது ஓய்வுகாலத்திற்கு என்றால் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் அப்போது வரும். பணவீக்கம் + இந்த எக்ஸ்டரா செலவுகளுக்கு இந்த வட்டி விகிதம் போதுமா என்பதை நன்கு யோசித்து பாருங்கள்.

'இதெல்லாம் சரி...ரிஸ்க் அதிகம் என்று சொல்கிறார்களே?' - இது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ்.

ஆம்...லாபம் அதிகம் கிடைக்கும்போது, ரிஸ்கும் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த பங்கில் முதலீடு செய்கிறீர்கள்...எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து இந்த ரிஸ்க் மாறுபடும்.

5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்றால் ரிஸ்க் குறைவு தான். 3 ஆண்டுகளுக்குள் முதலீடு தேவை என்றால் அதற்கு ஏற்ற பங்குகள் உண்டு. எத்தனை ஆண்டு பிளானுக்கு...எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

நாளை: பங்குச்சந்தையில் 'செபி'யின் பங்கு என்ன?!

Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி வ... மேலும் பார்க்க

ICICI வங்கிக்கு சம்மன் அனுப்பிய SEBI... என்ன ஆச்சு? | IPS FINANCE | EPI - 44

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்த 24,854 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு.இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எ... மேலும் பார்க்க

Basics of Share Market 5 : பங்குச்சந்தையில் SEBI-யின் 'பங்கு' என்ன? | செபி

பங்குச்சந்தையில் தினமும் நீங்கள், நான், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலர் பணம் போட்டு, லாபம் எடுத்து லட்சம்...கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது.இதில் யாராவது ஒரு... மேலும் பார்க்க

Basics of Share Market 3: BSE, NSE... Sensex, Nifty 50 என்றால் என்ன?!

முதல் அத்தியாயத்தில், 'IPO-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் இடமே பங்குச்சந்தை ஆகும்' என்று பார்த்தோம். இந்த IPO-வை பட்டியலிடும் இடம் ஒன்று இருக்கும் அல்லவா...அது தான... மேலும் பார்க்க