செய்திகள் :

Basics of Share Market 7 : பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன? | Trading

post image

'ஷேர் மார்க்கெட்ல இன்னைக்கு காலைல இவ்ளோ காசு போட்டேன்... இப்போ இவ்ளோ சம்பாதிச்சுட்டேன்' என்று நிறைய பேர் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால், கடந்த அத்தியாயத்தில் 'பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டுக்குத்தான் ஏற்றது' என்று கூறப்பட்டிருக்கிறது. அது உங்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் குழப்பத்திற்கான பதில் இதோ...

பணத்தைப் பெருக்குவதற்கு பங்குச்சந்தையில் 'முதலீடு' செய்யலாம். ஆனால், பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க 'டிரேடிங்' செய்ய வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் காசு போட்டு, காசு எடுப்பது ஆகும்.

ரொம்ப குழம்பிக்கொள்ள வேண்டாம். பங்குச்சந்தையில் இன்று காலை ரூ.100 போடுகிறோம் என்றால், இன்று மாலையோ, அடுத்து ஒரு வாரத்திலோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ, அந்த ரூ.100 பெருகியிருந்தாலும் சரி...குறைந்திருந்தாலும் சரி...காசை எடுத்துவிடுவது தான். இந்த மாதிரி செய்பவர்கள் தான் மேலே கூறியிருப்பதுபோல அதிக லாபம் பார்த்ததாக கூறுவது. ஆனால், இதில் ரிஸ்க் மிக மிக மிக... அதிகம்.

இன்ட்ரா டே டிரேடிங், ஸ்விங் டிரேடிங், பொசிஷனல் டிரெடிங் - இப்படி இந்த டிரேடிங் பல வகைப்படும். டிரேடிங் எதற்காக செய்கிறார்கள்? என்று பார்த்தால், சிலருக்கு பங்குச்சந்தை தான் தொழிலாக இருக்கும். இவர்கள் டிரேடிங் செய்வார்கள். இல்லையென்றால், சிலருக்கு இப்போது இருக்கும் வருமானம் போதாது. அதனால், 'இரண்டாவது வருமானத்திற்காக' டிரேடிங் செய்வார்கள். டிரேடிங்கில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது என்னவென்றால், 'ரிஸ்க் மிக மிக மிக அதிகம்'. அதனால், பங்குச்சந்தையை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடுபடுவது நல்லது.

'இன்ட்ரா டே டிரேடிங்' குறித்து பார்ப்போம்...

டிரேடிங்கில் ஒரு வகையான 'இன்ட்ரா டே டிரேடிங்' குறித்து பார்ப்போம்.

இன்ட்ரா டே டிரேடிங் என்றால் ஒரே நாளில் காசு போட்டு, ஒரே நாளில் காசை எடுப்பது ஆகும். அதாவது இன்று காலை 10 மணிக்கு ரூ.100-க்கு ஒரு பங்கை வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒன்றரை மணி நேரத்தில் அந்த பங்கு ரூ.102 ஆக உயர்கிறது என்றால், ரூ.2 லாபம் என்று விற்றுவிடுவார்கள் அல்லது இன்று இந்த பங்கின் விலை இன்னும் சற்று ஏறும் என்று வைத்திருந்து பங்குச்சந்தை முடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால் விற்பார்கள். - இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், காலை 10 மணிக்கு ரூ.100-க்கு ஒரு பங்கை வாங்குகிறார்கள் என அதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பங்கின் விலை ரூ.98 ஆக குறைகிறது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அப்போதே விற்றுவிடுவார்கள் அல்லது பங்கின் விலை ஏறும் என்று பொறுத்திருந்து பார்த்து விற்பார்கள்.

முதலீடு செய்த தொகை லாபத்தில் உயர்ந்திருந்தாலும், நஷ்டமாக குறைந்திருந்தாலும் அதே நாளில் பங்கு வாங்குவது...பங்கு விற்பது இரண்டும் நடந்துவிடும். அது தான் இன்ட்ரா டே டிரேடிங்.

நாளை: டிரேடிங்கில் 'லீவரேஜ்' என்றால் என்ன?

Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி வ... மேலும் பார்க்க

ICICI வங்கிக்கு சம்மன் அனுப்பிய SEBI... என்ன ஆச்சு? | IPS FINANCE | EPI - 44

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்த 24,854 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு.இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எ... மேலும் பார்க்க

Basics of Share Market 5 : பங்குச்சந்தையில் SEBI-யின் 'பங்கு' என்ன? | செபி

பங்குச்சந்தையில் தினமும் நீங்கள், நான், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலர் பணம் போட்டு, லாபம் எடுத்து லட்சம்...கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது.இதில் யாராவது ஒரு... மேலும் பார்க்க

Basics of Share Market 4 : பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?!

'பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்கறதெல்லாம் சரி...நான் ஏன் அதுல முதலீடு செய்யணும்?' என்ற கேள்வி எழலாம். நீங்கள் அரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை பெருக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். 'பங்குச்சந்தைய... மேலும் பார்க்க