செய்திகள் :

Bigg Boss Tamil 8: ஆரம்பமான அடுத்த நாமினேஷன்; அணி மாறும் சாச்சனா, ஜெஃப்ரி; அடுத்து என்ன நடக்கும்?

post image
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்கள் அணியில் 7 பேரும், பெண்கள் அணியில் 9 பேரும் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில், அதில் இந்த வாரம் மிக்ஸ் நாமினேஷன் அதனால் யார் யாரை வேண்டுமானாலும் நாமினேஷன் செய்யலாம் என்று பிக்பாஸ் கூறியிருக்கிறார்.

Bigg Boss 8

அதன்படி விஜே விஷால் ஜாக்லினையும், ஆர்.ஜே ஆனந்தி சௌந்தர்யாவையும், ரஞ்சித், ஜாக்குலின் அன்ஷிதாவையும், சுனிதா, அன்ஷிதா இருவரும் சத்யாவை நாமினேஷன் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சில காரணத்தைக் கூறி நாமினேட் செய்திருக்கிறார்கள். இந்த வாரத்தில் எல்லோரும் திட்டம் போடாமல் அவரவர்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரம் எந்த இரண்டு பேர் அணி மாறப் போகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்க, பெண்கள் அனைவரும் சேர்ந்து சாச்சனாவை தேர்வு செய்கிறார்கள். அதேபோல ஆண்கள் அனைவரும் சேர்ந்து ஜெஃப்ரியை தேர்வு செய்கிறார்கள். இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

நடிக்க வரும் முன்பே வில்லங்கம், வெளிநாட்டு ரசிகையுடன் காதல் - அர்னவைத் தொடரும் சர்ச்சைகள்

பிக்பாஸ் சீசன் 8 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் நிகழ்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது, 'உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததுன்னா, வாயாலேயே அதைக் கெடுத்துடாதீங்க' என விஜய... மேலும் பார்க்க

BB Tamil Day 14: சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட தர்ஷா; விசே உசுப்பி விட்டதால் சூடான அர்னவ்

இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அர்னவ் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், போட்டியாளர்கள் எந்த மாதிரியான தர வரிசையில் இருக்கிறார்கள் என்பதை ஒரு உத்தேசமான கணிப்பாக பார்த்து விடுவோம். ஆண்கள், பெண்கள் என்... மேலும் பார்க்க

Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி - இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன... மேலும் பார்க்க