1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரி'யை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல...
Cibil: `எமதர்மனுக்கு சித்ரகுப்தர் போல நமக்கு சிபில்'- சிபில் ஸ்கோரை சாடிய கார்த்திக் சிதம்பரம்
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
நேற்று வங்கி சட்டத் திருத்த மசோதாவின் போது, சிபில் ஸ்கோர் குறித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
சிபில் ஸ்கோர் குறித்து கார்த்திக் சிதம்பரம் பேசியதாவது, "எமதர்மனுக்கு சித்ரகுப்தன் எப்படி உலகத்தில் நாம் செய்யும் அனைத்தையில் குறிப்பு எடுக்கிறாரோ, அப்படி சிபில் என்ற அமைப்பு நம் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிறது. நீங்கள் கார் லோன் எடுக்க வேண்டுமானாலும், நிதி அமைச்சர் வீட்டு லோன் எடுக்க வேண்டுமானாலும் அனைத்தும் சிபில் ஸ்கோரை பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.
இது டிரான்ஸ் யூனியன் என்னும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தான் நம் ஒவ்வொருவரின் கிரெடிட்டையும் மதிப்பிடுகிறது. ஆனால் அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள், சரியாக நம் கிரெடிட்டுகளை அப்டேட் செய்கிறார்களா, அதில் எதாவது தவறு நடந்தால் எப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. நமக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறது.
வங்கிகளில் 'கடனையை சரியாக கட்டி இருக்கிறோம்' என்று கூறினால், உங்கள் சிபில் ஸ்கோர் மோசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நமக்கு சிபிலிடம் எப்படி முறையிடுவது என்று தெரியவில்லை.
விவசாயிகள் மானியம் மூலம் தங்களது கடனை அடைத்தால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை. ஏ.ஆர்.சி மூலம் செட்டில்மெண்டிற்கு சென்றால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை. இந்த விஷயங்களில் பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இதை செய்ய அரசு தவறிவிட்டது" என்று கூறினார்.