செய்திகள் :

Coolie: ரஜினி 50 கொண்டாட வரும் 'கூலி'; அமீர்கானின் சஸ்பென்ஸ் ரகசியம் - லேட்டஸ்ட் அப்டேட்

post image

சூப்பர் ஸ்டாரின் 'கூலி' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனல் வீச ஆரம்பித்திருக்கிறது. 'கூலி'யின் அடுத்த மூவ் என்ன என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இவை.

ரஜினி

மல்டி ஸ்டார்களின் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி'யில் ரஜினியுடன், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஷோபின் ஷாகீர் எனப் பலரும் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு பூஹா ஹெக்டே நடனம் ஆடுகிறார். படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் தேவா, அதைப்போல சைமன் ஆக நாகார்ஜுனா, காளீஷாவாக உபேந்திரா, ராஜசேகராக சத்யராஜ், ப்ரீத்தியாக ஸ்ருதி ஹாசன், தயால் ஆக சோபின் ஷாஹிர் ஆகியோரின் கதாபாத்திரங்களின் தோற்றங்களும் பெயர்களும் வெளியாகின. சமீபத்தில் லோகேஷின் பிறந்தநாளின்போது அமீர்கானுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, அமீர்கானும் படத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். அன்று தான் லோகேஷுக்கும் அமீர்கானுக்கும் பிறந்த நாள் என்பது அறிந்ததே!

அமீர்கானுக்கு இதில் ரொம்பவே வலுவான ரோல். ரஜினியின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டதும், மகிழ்ச்சியுடன் வந்து நடித்து கொடுத்திருக்கிறார் அமீர்கான். அவரது போர்ஷன்கள் எண்ணூர் துறைமுகம் பகுதிகளிலும், ராஜஸ்தானிலும் படமாக்கியுள்ளனர். கடந்த வாரத்திலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும் இப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த கடைசி ஷெட்யூலில் ஷோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 'விக்ரம்' படத்தில் 'ரோலக்ஸ்' ஆக சூர்யா கலக்கியதுபோல, அமீர் கான் அசத்தலான மொமன்ட்டில் வந்து கலக்க உள்ளார். அதற்காக அவரது தோற்றத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

நாகார்ஜூனாவுடன்..

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். பூஜா ஹெக்டே ஆடும் முதல் சிங்கிளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் தீபாவளி என்றும், ஆகஸ்ட் 15 என்றும் பல தகவல்கள் சுற்றினாலும், ஆகஸ்ட்டில் ரிலீஸ் உறுதி எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. காரணம். ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாருக்கும் முக்கியமான ஒரு நாள். அன்று தான் அவர் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' வெளியானது. அன்றைய தினம் 'கூலி' வெளியானால் ரஜினி 50 கொண்டாடும் விதமாகவும் அமைந்துவிடும் என்கின்றனர். ரஜினியின் 'ஜெயிலர்' படமும் 2023ல் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று தான் வெளியானது. அவருக்கு ராசியான மாதமாக இருப்பதால், 'கூலி'யை ஆகஸ்ட்டில் எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikram: ``நான் எஸ்.ஜே.சூர்யா ஃபேன்; அவர் மான்ஸ்டர் மாதிரி'' - `வீர தீர சூரன்' சீக்ரெட்ஸ்

விக்ரம் நடித்திருக்கும் `வீர தீர சூரன்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. `சித்தா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தை இயக்குநர் S.U அருண் குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்காக விக்ரம்... மேலும் பார்க்க

Symphony: `சிம்பொனி, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம்' - மோடி சந்திப்பு குறித்து இளையராஜா

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்... மேலும் பார்க்க

Jonathan: ``ஒன்பது வயதில் ஆண், பெண் இருவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!'' - ஜோனாதன்

`ஆன்ட்-மேன் அன்ட் வேஸ்ப்: க்வான்டமேனியா (ANT-MAN AND WASP : QUANTUMANIA)', `தி ஹார்டர் தே ஃபால் (THE HARDER THEY FALL)' போன்ற திரைப்படங்கள் மூலம் பரிச்சயமானவர் ஹாலிவுட் நடிகர் ஜொனாதன் மேஜர்ஸ். குறிப்ப... மேலும் பார்க்க

Malavika Mohanan : `` அம்மா, இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானது " - மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

புகைப்படங்களை பிலிம் ரோலில் எடுப்பது எப்போதும் சிலருக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்! அப்படியான புகைப்படங்களை பொக்கிஷங்களாகப் பலரும் பாதுகாப்பார்கள். டிஜிட்டல் உள்ளங்கையில் அனைத்தையும் கொண்டு வந்த... மேலும் பார்க்க