செய்திகள் :

Symphony: `சிம்பொனி, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம்' - மோடி சந்திப்பு குறித்து இளையராஜா

post image
லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கில் முதன்முதலாக சிம்பொனியை அரங்கேற்றுவது இளையராஜாதான். இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தியிருந்தனர்.

ஸ்டாலின், இளையராஜா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வாழ்த்தி, லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றுமிருந்தார். மேலும், இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சிப் பொங்க அறிவித்திருந்தார்.

இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இளையராஜாவிற்கு மத்திய அரசிடமிருந்து, குறிப்பாக பிரதமர் மோடியிடமிருந்து வாழ்த்து வராமல் இருந்ததை இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இளையராஜா, "மதிப்பிற்குரிய பிரதமர் மோடி ஜியை சந்தித்து எனது சிம்பொனி 01 'Valiant' குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikram: ``நான் எஸ்.ஜே.சூர்யா ஃபேன்; அவர் மான்ஸ்டர் மாதிரி'' - `வீர தீர சூரன்' சீக்ரெட்ஸ்

விக்ரம் நடித்திருக்கும் `வீர தீர சூரன்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. `சித்தா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தை இயக்குநர் S.U அருண் குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்காக விக்ரம்... மேலும் பார்க்க

Coolie: ரஜினி 50 கொண்டாட வரும் 'கூலி'; அமீர்கானின் சஸ்பென்ஸ் ரகசியம் - லேட்டஸ்ட் அப்டேட்

சூப்பர் ஸ்டாரின் 'கூலி' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனல் வீச ஆரம்பித்திருக்கிறது. 'கூலி'யின் அடுத்த மூவ் என்ன என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இவை. ரஜின... மேலும் பார்க்க

Jonathan: ``ஒன்பது வயதில் ஆண், பெண் இருவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!'' - ஜோனாதன்

`ஆன்ட்-மேன் அன்ட் வேஸ்ப்: க்வான்டமேனியா (ANT-MAN AND WASP : QUANTUMANIA)', `தி ஹார்டர் தே ஃபால் (THE HARDER THEY FALL)' போன்ற திரைப்படங்கள் மூலம் பரிச்சயமானவர் ஹாலிவுட் நடிகர் ஜொனாதன் மேஜர்ஸ். குறிப்ப... மேலும் பார்க்க

Malavika Mohanan : `` அம்மா, இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானது " - மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

புகைப்படங்களை பிலிம் ரோலில் எடுப்பது எப்போதும் சிலருக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்! அப்படியான புகைப்படங்களை பொக்கிஷங்களாகப் பலரும் பாதுகாப்பார்கள். டிஜிட்டல் உள்ளங்கையில் அனைத்தையும் கொண்டு வந்த... மேலும் பார்க்க